இந்தியாவுக்காக அந்த பெரிய வெற்றியை பெற்றுக் கொடுக்கும் நாளுக்காக காத்திருக்கேன்.. ரிங்கு சிங் பேட்டி

Rinku Singh 5
- Advertisement -

இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த அவர் கடந்த 2018 முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பெஞ்சில் அமர்ந்து வந்தார். அதன் பயனாக கடந்த வருடம் ஓடிரு போட்டியில் அசத்திய அவர் இந்த வருடம் முழுமையாக 14 போட்டிகளில் விளையாடி மிகச் சிறந்த பினிஷராக செயல்பட்டார்.

குறிப்பாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அடுத்தடுத்த 5 சிக்ஸர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன் காரணமாக இந்தியாவுக்காக அறிமுகமான அவர் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக பேட்டிங் செய்த போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி வெற்றியில் முக்கிய பங்கற்றினார்.

- Advertisement -

ரிங்குவின் இலக்கு:
அதே போல 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் நேபாளுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் கடைசி நேரத்தில் முக்கிய ரன்களை அதிரடியாக எடுத்த அவர் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியிலும் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அவர் வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் அழுத்தமான நேரங்களில் தில்லாக விளையாடும் அவர் தோனி வரிசையில் அடுத்த ஃபினிசராக இருப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் இந்த சிறிய போட்டிகளை விட 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக ஃபினிஷிங் செய்து வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதே தம்முடைய பெரிய இலக்கு என்று ரிங்கு சிங் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்புக்காக நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும் தற்போது வருங்காலத்தைப் பற்றி அதிகமாக நான் சிந்திக்கவில்லை”

- Advertisement -

“தற்போது நான் சிறப்பாக செயல்பட்டால் அந்த வாய்ப்பை பிடிக்க முடியும் என்று நம்புகிறேன். எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் உலகின் எந்த இடமாக இருந்தாலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக என்னுடைய 100% பங்களிப்பை கொடுப்பேன். அலிகார் எனும் எங்களுடைய சிறிய ஊரிலிருந்து ஐபிஎல் மற்றும் இந்தியாவுக்காக முதல் வீரராக விளையாடுவது என்னைப் பொறுத்த வரை பெரிய விஷயமாகும்”

இதையும் படிங்க: இந்திய அணியிலிருந்து விலகி.. ராகுல் டிராவிட் கோச்சிங் செய்யப் போகும் ஐபிஎல் அணி

“நாட்டுக்காக அதிலும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் விளையாட வேண்டும் என்பதே ஒவ்வொரு வீரர்களின் கனவாக இருக்கும். நானும் அந்த கனவு கண்டேன். என்னுடைய பெயர் உலகக்கோப்பை அணியில் இடம் பெறும் போது அதற்கு நான் எப்படி ரியாக்ஷன் கொடுப்பேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். அந்த லட்சியத்திற்காக நான் கடினமாக உழைத்து வருகிறேன்” என்று கூறினார்.

Advertisement