இந்திய அணியிலிருந்து விலகி.. ராகுல் டிராவிட் கோச்சிங் செய்யப் போகும் ஐபிஎல் அணி

Rahul Dravid IPL
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது. மேலும் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கோப்பையை தொட முடியாமல் கலங்கிய கண்களுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் சோகத்தையும் கொடுத்தது.

அவர்களை விட சச்சினுக்கு பின் அதிக ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றி நாயகனாக செயல்பட்ட ராகுல் டிராவிட் கடைசி வரை உலக கோப்பையை வெல்ல முடியாமலேயே விடை பெற உள்ளார். அதாவது 2003இல் வீரராக தோல்வியை சந்தித்த அவர் 2007இல் கேப்டனாக படுதோல்வியை சந்தித்த நிலையில் தற்போது பயிற்சியாளராக கூட உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேற உள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் கோச்:
ஏனெனில் 2021இல் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவருடைய பதவி காலம் இத்தொடருடன் நிறைவுக்கு வந்துள்ளது. அத்துடன் 2023 ஆசிய கோப்பையை தவிர்த்து 2022 டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையில் டிராவிட் தலைமையில் இந்தியா தோல்விகளையே சந்தித்தது. அதனால் ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பதால் மேற்கொண்டு நீடிக்க விரும்பாத ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக உள்ளதாக செய்திகள் வெளியானது.

அத்துடன் அவருக்கு பதிலாக தற்போது என்சிஏவில் இயக்குனராக உள்ள மற்றொரு முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியிலிருந்து வெளியேறும் ராகுல் டிராவிட்டை தங்களுடைய அணியின் ஆலோசகராக நியமிப்பதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் லக்னோ அணியில் கடந்த 2 வருடங்களாக ஆலோசகராக செயல்பட்டு வந்த கௌதம் கம்பீர் சமீபத்தில் அப்பதிவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் 2024 சீசனில் தமக்கு மிகவும் பிடித்த கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளதாகவும் கௌதம் கம்பீர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். எனவே அவருக்கு பதிலாக ராகுல் டிராவிட்டை தங்களுடைய அணியின் புதிய ஆலோசகராக லக்னோ நியமிப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. சொல்லப்போனால் லக்னோ அணிக்கு பெங்களூருவை சேர்ந்த கேஎல் ராகுல் கேப்டனாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: என்னோட ரோல் மாடலான அவரை தான் காப்பி பண்ண ட்ரை பண்றேன்.. ரிங்கு சிங் பேட்டி

மறுபுறம் பெங்களூருவை சேர்ந்த ராகுல் டிராவிட் அவருடன் நல்ல புரிதலை கொண்டுள்ளார். குறிப்பாக இந்திய அணியில் சுமாராக செயல்பட்டதால் உச்சகட்ட விமர்சனங்கள் எழுந்த போதும் கூட ராகுலுக்கு பயிற்சியாளராக டிராவிட் பெரிய ஆதரவை கொடுத்ததை மறக்க முடியாது. எனவே ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் கேஎல் ராகுல் – ராகுல் ட்ராவிட் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து சிறப்பாக செயல்படுவார்கள் என்று அந்த அணி நிர்வாகம் கருதுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement