என்னோட ரோல் மாடலான அவரை தான் காப்பி பண்ண ட்ரை பண்றேன்.. ரிங்கு சிங் பேட்டி

Rinku Singh 4
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் ஆஸ்திரேலியா கொடுத்த 209 இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் 80, இசான் கிசான் 58 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

இருப்பினும் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் அப்போது மறுபுறம் தில்லாக நின்ற ரிங்கு சிங் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 22* (14) ரன்களுடன் சூப்பரான ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

ரிங்குவின் ரோல் மாடல்:
ஐபிஎல் 2023 சீசனில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்து இந்தியாவுக்காக அறிமுகமான அவர் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக பேட்டிங் செய்த போட்டியிலும் வெற்றி பெற வைத்தார். அதே போல 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் நேபாளுக்கு எதிராகவும் சிறப்பாக ஃபினஷின் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் தற்போது இப்போட்டியிலும் அழுத்தமான நேரத்தில் கூலாக செயல்பட்டார்.

அந்த வகையில் தோனி போல இந்தியாவின் அடுத்த ஃபினிஷராக ரிங்கு சிங் உருவெடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் கடைசி ஓவரில் எப்படி செயல்பட வேண்டும் என்று தோனி கொடுத்த ஆலோசனைகள் இப்போட்டியில் ஃபினிஷிங் செய்ய தமக்கு உதவியதாக ரிங்கு சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அவருடைய ரோல் மாடலாக தோனி தான் இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் ரெய்னா தான் தம்முடைய ரோல் மாடல் என்று தெரிவிக்கும் ரிங்கு சிங் அவரை காப்பி செய்து தாம் விளையாட முயற்சிப்பதாக கூறியுள்ளது பின்வருமாறு. “நான் சுரேஷ் ரெய்னா பையாவின் மிகப்பெரிய ரசிகன். அவரை நான் பின்பற்றி வருகிறேன். அவரை நான் காப்பி செய்து விளையாட முயற்சிக்கிறேன். என்னுடைய வாழ்விலும் கேரியரிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். ஆரம்ப காலங்களில் கால் மற்றும் பேட்டை எப்படி நகர்த்துவது என்பதில் அவர் எனக்கு நிறைய உதவியுள்ளார்”

இதையும் படிங்க: முதல் டி20ல அந்த தப்பை செய்யலனா ஜெய்ச்சுருப்போம்.. அவரை நாங்க அடக்கனும்.. ஜோஸ் இங்லிஷ் பேட்டி

“நான் எதுவுமே கேட்காத போதிலும் அவர் எனக்கு தேவையான நிறைய அம்சங்களில் உதவியுள்ளார். எனவே எனக்கு சந்தேகம் வரும் போதெல்லாம் நான் அவரை அழைப்பேன். அவர் எனக்கு பெரிய சகோதரரை போன்றவர். அழுத்தத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்துள்ள அவர் 4 – 5 பந்துகளை முதலில் எதிர்கொண்டு பின்னர் அதிரடியாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். அது ஐபிஎல் தொடரிலும் தற்போது இந்தியாவுக்காகவும் எனக்கு உதவி வருகிறது”என்று கூறினார்.

Advertisement