ஜஸ்ப்ரீத் பும்ராவை விட ஆட்டநாயகன் விருதை அவருக்கு குடுத்திருந்தா தான் சரியா இருந்திருக்கும் – ரசிகர்கள் ஆதங்கம்

Jaiswal
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது. ஏற்கனவே ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற சிறப்பான வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

அந்தவகையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 45 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இரண்டாவது இன்னிங்சிலும் 46 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதற்காகவே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆட்டநாயகன் விருதினை பும்ராவிற்கு வழங்கியதை விட இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருதினை அளித்திருந்தால் அது சரியானதாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் சிலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏனெனில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வாலை தவிர்த்து எந்த ஒரு வீரருமே 40 ரன்கள் கூட தாண்டவில்லை.

- Advertisement -

ஆனால் தனி ஒருவராக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்களை குவித்து அசத்தினார். இந்திய மண்ணில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதிலேயே 200 ரன்களை அடித்து அசத்தியிருந்ததால் அவருக்கே அந்த விருதினை வழங்கி இருந்தால் அதுவே சரியாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் பலரும் தற்போது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : அவங்க வந்தா உங்களுக்கு டீம்ல இடமில்ல.. போய் ரஞ்சிக் கோப்பையில் விளையாடிடுங்க.. பிரக்யான் ஓஜா அட்வைஸ்

அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 290 பந்துகளை சந்தித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 209 ரன்கள் குவித்து அதிரடி காட்டியதோடு இந்திய அணியின் ரன் குவுப்புக்கு உதவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement