அவங்க வந்தா உங்களுக்கு டீம்ல இடமில்ல.. போய் ரஞ்சிக் கோப்பையில் விளையாடிடுங்க.. பிரக்யான் ஓஜா அட்வைஸ்

Pragyan Ojha
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. அந்த வெற்றியில் பவுலிங் துறையில் பும்ரா, அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு முக்கிய பங்காற்றினர்.

இருப்பினும் பேட்டிங் துறையில் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றினார். அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் இக்கட்டான சூழ்நிலையில் 104 ரன்கள் குவித்து ஓரளவு ஃபார்முக்கு திரும்பி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

வாய்ப்பு வேணும்னா:
இருப்பினும் ஏற்கனவே தடுமாற்றமாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் 2வது போட்டியிலும் அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக விளையாடி பின்னடைவை ஏற்படுத்தினார். மேலும் கடைசியாக விளையாடிய 13 டெஸ்ட் இன்னிங்ஸில் அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறி வருவதால் விமர்சனங்களை சந்தித்துள்ள அவருக்கு மூன்றாவது போட்டியில் விராட் கோலி, ராகுல் வந்தால் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் 3வது போட்டிக்கு 10 நாட்கள் இடைவெளி இருப்பதால் உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பைக்கு சென்று சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா ஆலோசனை கூறியுள்ளார். இது பற்றி கலர்ஸ் சினிபிளக்ஸ் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஸ்ரேயாஸ் ஐயர் சற்று பின்தங்கியுள்ளார். விராட் கோலி, ராகுல் போன்ற மகத்தான பேட்ஸ்மேன்களும் நல்ல ரன்கள் குவித்துள்ளார்கள். எனவே அணிக்குள் வரும் போது அவர்களுக்கு தாமாக 11 பேர் கொண்ட அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதனால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் அவர்களுக்கு வழி விட வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் கடந்த போட்டியில் ரன்கள் அடிக்கவில்லை”

இதையும் படிங்க: கையை தூக்கி.. வாவ் என்ன ஒரு பிளேயர்ன்னு சொல்வேன்.. இந்திய வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பாராட்டு

“அதற்காக அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று அர்த்தமல்ல. ஆனால் மகத்தான பேட்ஸ்மேன்கள் அணிக்குள் வரும் போது உங்களுக்கு இடம் இருக்காது. அணி நிர்வாகமும் உங்களுக்கு இருக்கையை வழங்காது. எனவே உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று அங்கே ரன்கள் அடித்து வாருங்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல 10 நாள் இடைவெளியில் இங்கிலாந்து அணி பயிற்சி எடுக்க அபுதாபிக்கு சென்றுள்ள நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி தன்னுடைய தேர்வை நிரூபித்தால் வாய்ப்பு கிடைக்கலாம்.

Advertisement