கையை தூக்கி.. வாவ் என்ன ஒரு பிளேயர்ன்னு சொல்வேன்.. இந்திய வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பாராட்டு

Ben Stokes 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் சுதாரிப்புடன் செயல்பட்ட இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ள அசத்தியுள்ளது.

முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காத நிலையில் தனி ஒருவனாக அசத்திய ஜெய்ஸ்வால் 209 ரன்கள் விளாசி இந்தியாவை காப்பாற்றினார். அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் இக்கட்டான சூழ்நிலையில் சுப்மன் கில் 104 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு கை கொடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

என்ன ஒரு பிளேயர்:
இருப்பினும் அவர்களை மிஞ்சி தேவைப்படும் நேரங்களில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை சாய்த்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட பும்ரா மொத்தம் 9 விக்கெட்களை எடுத்ததால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். குறிப்பாக கடந்த போட்டியில் 196 ரன்கள் குவித்து தோல்வியை கொடுத்த ஓலி போப்பின் 3 ஸ்டம்ப்களையும் பறக்க விட்ட அவர் கிளீன் போல்ட்டாக்கியது ரசிகர்களுக்கு கண்கொள்ள கட்சியாக அமைந்தது.

அதை விட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டாக்ஸை துல்லியமான யார்கர் பந்தால் பும்ரா போல்டாக்கியதும் மறக்க முடியாததாக அமைந்தது. குறிப்பாக அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போல்டான பென் ஸ்டோக்ஸ் பேட்டை கீழே விட்டு “இப்படி போட்டால் எப்படி அடிக்கிறது” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்து நிராயுதபாணியாக நின்றது வைரலானது.

- Advertisement -

இந்நிலையில் “வாவ் என்ன ஒரு வீரர்” என்று பாராட்டக்கூடிய எதிரணி வீரர்களில் ஒருவராக பும்ரா இருப்பதாக பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். இது பற்றி முதல் போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வாரம் பும்ரா மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய நம்ப முடியாத திறமையான பந்து வீச்சாளர்கள் பந்து வீசியதை நீங்கள் பார்த்தீர்கள். அதில் எதிரணியில் உள்ள பும்ரா போன்றவரை பார்த்து நீங்கள் சில நேரங்களில் உங்களுடைய கைகளை மேலே தூக்கி என்ன ஒரு அற்புதமான பிளேயர் என்று சொல்ல வேண்டும்”

இதையும் படிங்க: என்னுடைய இந்த 6 விக்கெட் சாதனையை நான் அவருக்காக டெடிகேட் பண்றேன் – ஜஸ்ப்ரீத் பும்ரா உருக்கம்

“அப்படித்தான் ஆண்டர்சன் எங்களுக்கு ஆவார். இப்போட்டி முழுமையும் பும்ரா அபாரமாக செயல்பட்டார். அதே சமயம் நாங்களும் சில நேரங்களில் இந்தியாவுக்கு மேலே செயல்பட்டோம். ஆனாலும் எங்களை கீழே தள்ளி மேலே வருவதற்காக இந்தியா ஏதோ ஒன்றை செய்தது. இறுதியில் பும்ரா ஒரு சாம்பியன் பிளேயர். பொதுவாக நான் நல்ல வீரர்களின் செயல்பாடுகளை பார்க்க விரும்புவேன். பும்ரா அவர்களில் ஒருவர். இது அவருக்கு நல்ல போட்டியாக அமைந்தது” என்று கூறினார்.

Advertisement