என்னுடைய இந்த 6 விக்கெட் சாதனையை நான் அவருக்காக டெடிகேட் பண்றேன் – ஜஸ்ப்ரீத் பும்ரா உருக்கம்

Bumrah
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. அதோடு 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது.

முதல் போட்டியின் போது சறுக்கலை சந்தித்திருந்த இந்திய அணியானது இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அட்டகாசமான வெற்றியை ருசித்தது. அதிலும் குறிப்பாக இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பும்ரா திகழ்ந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 45 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதேபோன்று இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். மொத்தமாக இந்த போட்டியில் 91 ரன்களை விட்டுக்கொடுத்திருந்த அவர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இப்படி அவர் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி இருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இப்படி சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட் எடுத்த சாதனையை அவரது மகன் அங்கித்திற்கு டெடிகேட் செய்வதாக உருக்கமாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னுடைய மகன் அங்கிட் என்னுடன் பயணிக்கும் முதல் டூர் இதுதான். எனவே இந்த 6 விக்கெட் எடுத்த இந்த சிறப்பான தருணத்தை எனது மகனுக்காக டெடிகேட் செய்கிறேன் என அவர் பேசியிருந்தார். இந்த விடயம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி.. எங்கே, எப்போது.. வெளியான அட்டவணை

கடந்த 2021-ஆம் ஆண்டு சஞ்சனா கணேசன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு கடந்த ஆண்டு செம்ப்டம்பர் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement