ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி.. எங்கே, எப்போது.. வெளியான அட்டவணை

IND vs ZIM
- Advertisement -

புதிதாக பிறந்த 2024 புத்தாண்டில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியது. அதை தொடர்ந்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அது முடிந்ததும் இந்திய வீரர்கள் அனைவரும் 2024 ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளனர்.

அந்த தொடரில் விளையாடிய பின் இந்திய வீரர்கள் அடுத்ததாக வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்கும் 2024 ஐசிசி உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளனர். கடைசியாக 2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா இம்முறை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சாதனை படைக்கும் முனைப்புடன் அத்தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

ஜிம்பாப்வே தொடர்:
இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை முடித்துக் கொண்டு தங்களுடைய நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடும் என்று ஜிம்பாப்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2010, 2015, 2016 ஆகிய வருடங்களில் ஜிம்பாப்வே மண்ணில் இந்திய அணி டி20 தொடர்களில் விளையாடியுள்ளது. ஆனால் அந்த வருடங்களில் அதிகபட்சமாக 2 அல்லது 3 போட்டிகள் கொண்ட தொடரில் மட்டுமே இந்தியா விளையாடியிருந்தது. எனவே இம்முறை வரலாற்றிலேயே முதல் முறையாக ஜிம்பாப்வே மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாட உள்ளது அந்நாட்டு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் சமீப காலங்களாக பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை தோற்கடித்து ஜிம்பாப்வே நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. அந்த வரிசையில் தங்களுடைய சொந்த ஊரில் இந்தியா போன்ற உலகின் நம்பர் ஒன் டி20 அணிக்கு எதிராக விளையாடுவது உண்மையாகவே ஜிம்பாப்வே அணியின் முன்னேற்றத்திற்கு உதவும் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் தவறவிட இருக்கும் நட்சத்திர இந்திய வீரர் – இந்திய அணியாகு ஏற்பட்ட பின்னடைவு

2024 ஜிம்பாப்வே – இந்திய அணிகள் டி20 தொடரின் அட்டவணை (இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்கும்)
முதல் டி20 : ஜூலை 6, ஹராரே
2வது டி20 : ஜூலை 7, ஹராரே
3வது டி20 : ஜூலை 10, ஹராரே
4வது டி20 : ஜூலை 13, ஹராரே
5வது டி20 : ஜூலை 14, ஹராரே

Advertisement