மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் தவறவிட இருக்கும் நட்சத்திர இந்திய வீரர் – இந்திய அணியாகு ஏற்பட்ட பின்னடைவு

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் இந்த 10 நாட்கள் இடைவெளிக்கு முன்னர் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்து எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ரவீந்திர ஜடேஜா அந்த போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவதாக விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

மேலும் விரைவில் காயம் குணமைடைந்த பிறகு மீண்டும் அவர் இந்திய அணியில் இணைவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கும் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியிலும் ஜடேஜா இடம்பெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைந்து முழு பிட்னஸ்ஸை எட்ட தனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டும் என ரவீந்திர ஜடேஜா கேட்டுக் கொண்டுள்ளதால் அவர் மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஒருவேளை அப்படி ஜடேஜா விளையாட முடியாமல் போனால் அது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.

இதையும் படிங்க : பொய் சொல்லாதீங்க.. மும்பை கேப்டனாக ரோஹித் நீக்கப்பட்டதன் காரணத்தை சொன்ன பவுச்சர்.. ரித்திகா அதிருப்தி

அதேவேளையில் இரண்டாவது போட்டியின் போது காயம் காரணமாக வெளியேறி இருந்த மற்றொரு முன்னணி பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் அணிக்கு திரும்ப இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement