- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அபிஷேக் சர்மா ஓகே.. ருதுராஜ் கெய்க்வாட் நாட் ஓகே வா? இது என்ன மேட்டர்னு புரியல – ரசிகர்கள் ஆதங்கம்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரில் சமநிலை வருகின்றனர். அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை செஞ்சூரியன் நகரில் நடைபெற இருக்கிறது.

ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் :

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடி வரும் அபிஷேக் ஷர்மா முதல் இரண்டு போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றத்தை அளித்துள்ளார். இதன் காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்திய அணியில் அறிமுகமான அவர் இதுவரை 10 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 170 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்த அவர் அதன் பிறகு 9 ஆட்டங்களில் 70 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ஒருமுறை கூட அவர் 20 ரன்களை தாண்டவில்லை. இப்படி இருக்கையில் அவரை தவிர்த்து விட்டு சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை டி20 அணிக்குள் கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 66 ஆட்டங்களில் விளையாடியுள்ள ருதுராஜ் 2380 ரன்கள் குறித்துள்ளார்.

- Advertisement -

அது மட்டும் இன்றி இந்திய அணிக்காக 23 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 40 ரன்கள் சராசரியுடன் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதம் என 633 ரன்கள் குவித்துள்ளார். இப்படி 40 ரன்கள் சராசரி வைத்துக் கொண்டு பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு பதிலாக அபிஷேக் ஷர்மாவின் பின்னால் இந்திய அணி ஏன் செல்கிறது? பிசிசிஐ அவருக்கு தொடர் வாய்ப்பு ஏன் வழங்க வேண்டும்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : திரும்ப திரும்ப தவறு செய்றீங்க.. இந்திய அணியை எச்சரித்த சுனில் கவாஸ்கர் – என்ன காரணம்?

ஏற்கனவே இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடிப்பது குறித்து பேட்டியளித்திருந்த இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் : திறமையுள்ள அனைத்து வீரர்களுக்கும் அணி நிர்வாகம் வரிசைப்படி அனைவருக்கும் வழங்கி வருகிறது என்று அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -