ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்தது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள வேளையில் அடுத்ததாக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்திய அணி செய்வது தவறு :
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக இந்திய அணி எந்த பயிற்சி போட்டியிலும் விளையாடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய ஏ அணிக்கு எதிராக இந்திய அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதுவும் கைவிடப்பட்ட நிலையில் இப்படி முன்னேற்பாடுகள் இன்றி இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவது இந்திய அணிக்கு பாதகமாக முடியும் என சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு பேட்ஸ்மேன் வலைப்பயிற்சி பேட்டிங் செய்வதை விட ஒரு பயிற்சி போட்டியின் போது பேட்டிங் செய்து நடுப்பகுதியில் பந்து படுவது போன்ற உணர்வு வேறு எதிலும் கிடைக்காது. வலைப்பயிற்சியில் என்னதான் எவ்வளவு நேரம் நாம் பேட்டிங் பயிற்சி செய்தாலும் அது பயிற்சி போட்டியை போன்று அமையாது.
ஏற்கனவே பல தொடர்களில் இந்திய அணி இதுபோன்று பயிற்சி போட்டியை தவிர்த்த போது மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யும்போது பந்து வீச்சாளர்கள் நோபால் வீசுவதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். அதேபோன்று பேட்ஸ்மேன்களும் எத்தனை முறை அவுட்டானாலும் அதைப்பற்றி கவனத்தில் கொள்ள மாட்டார்கள்.
இப்படி எதற்குமே பயனில்லாத வலைப்பயிற்சி தேவை இல்லாத ஒன்று. அதற்கு பதிலாக பயிற்சி போட்டியில் விளையாடினால் அனைத்து வீரர்களுக்குமே அது ஒரு நல்ல பயனாக இருக்கும். மேலும் பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை புரிந்து கொள்ளவும் எந்த ஏரியாவில் பந்து வீசலாம் என்பதையும் கணிக்க முடியும். அதேபோன்று பேட்ஸ்மேன்களும் சூழலுக்கு ஏற்றவாறு விளையாடுவதற்கு பயிற்சி போட்டி தான் அவசியம்.
இதையும் படிங்க : இதுல என்ன லாஜிக் இருக்குன்னு புரியல.. ராகுல் டிராவிட் செய்தது மிகப்பெரிய விமர்சனம் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
இந்திய அணி மொத்தம் 57 நாட்கள் ஆஸ்ட்ரேலியாவில் தங்கி விளையாட உள்ளது. அதில் 27 நாட்கள் மட்டுமே போட்டியின் நாட்களாக இருக்கும். மற்றபடி ஓய்வு தான் இருக்கும் இதில் என்ன பணிச்சுமை இருக்கிறது? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என இந்திய அணியை எச்சரித்து சுனில் கவாஸ்கர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.



