இதுல என்ன லாஜிக் இருக்குன்னு புரியல.. ராகுல் டிராவிட் செய்தது மிகப்பெரிய விமர்சனம் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதோடு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த டிராவிட் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார்.

ராகுல் டிராவிட் செய்தது மிகப்பெரிய தவறு :

ஏற்கனவே தலைமைப் பயிற்சியாளராக இருந்த குமார் சங்ககாரா அந்த பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராகுல் டிராவிட் மீண்டும் ராஜஸ்தான அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளதால் அடுத்த ஆண்டு ராஜஸ்தான் அணியின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல், சிம்ரன் ஹெட்மயர் மற்றும் சந்தீப் ஷர்மா ஆகியோரை தக்க வைத்துள்ளது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணி ஏற்கனவே ஆறு வீரர்களுக்கு 79 கோடி ரூபாய் வழங்கியுள்ளதால் மீதமுள்ள 41 கோடியை மட்டுமே வைத்துக்கொண்டு ஏலத்தில் பங்கேற்க இருக்கிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜாஸ் பட்லரை தக்க வைக்காதது தவறு என்றும் இந்த விடயத்தில் ராகுல் டிராவிட் என்ன லாஜிக்கில் இதற்கு சம்மதித்தார் என்றும் தெரியவில்லை என முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிறைய வீரர்களை தக்க வைத்துள்ளது.

- Advertisement -

ஆனாலும் அதில் கவலைப்பட வேண்டிய விடயம் யாதெனில் : ஜாஸ் பட்லர் அந்த அணியால் தக்க வைத்திருக்கப்பட வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக ஹெட்மயரை ஏன் தக்க வைத்தார்கள்? என்று புரியவில்லை. ஏனெனில் தற்போது ராஜஸ்தான் அணி தங்களது அனைத்து வீரர்களையும் தக்கவைத்து விட்டது. இனிமேல் அவர்களுக்கு ஆர்.டி.எம் கார்டும் கிடையாது. எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்லரை வாங்குவது கடினம்.

இதையும் படிங்க : 17 வயது மும்பை வீரரை சி.எஸ்.கே கேம்ப்க்கு அழைத்த தல தோனி.. பயிற்சிக்கு வாய்ப்பு – யார் இந்த வீரர்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் இரண்டு சதங்களை விளாசியுள்ளார். அது மட்டுமின்றி மிகச்சிறந்த அதிரடி வீரரான அவரை இப்படி விட்டுக் கொடுத்ததில் என்ன லாஜிக் இருக்கிறது என்று புரியவில்லை என ராகுல் டிராவிடின் இந்த தேர்வை நேரடியாக ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement