11.39 மணிக்கு நாற வாய்.. 1.28 மணிக்கு வேற வாய்.. மைக்கேல் வாகன் கருத்தை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்

Micheal Vaughan 5
- Advertisement -

ராஞ்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரில் மூன்று போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. எனவே இத்தொடரை வெல்வதற்கு 4வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடும் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் நாள் முடிவில் 302/8 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஜோ ரூட் சதமடித்து 106* ரன்களும் இந்திய அணிக்கு அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் ஆகாஷ் தீப் 3* விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். முன்னதாக ராஞ்சி மைதானத்தின் பிட்ச் போல இந்தியாவில் இதற்கு முன் பார்த்ததில்லை என்று போட்டி துவங்கும் முன் பென் ஸ்டோக்ஸ் வித்தியாசமான விமர்சனத்தை வைத்தார்.

- Advertisement -

வேற வாய் நாற வாய்:
குறிப்பாக ராஞ்சி பிட்ச் தூரத்திலிருந்து பச்சையாகவும் அருகில் சென்று பார்த்தால் வேறு மாதிரியாகவும் தெரிவதாக அவர் கூறியிருந்தார். எனவே இப்போட்டியில் என்ன நடக்கும் என்பது தமக்கே தெரியவில்லை என கூறிய பென் ஸ்டோக்ஸ் இந்தியா வேண்டுமென்றே தங்களுக்கு சாதகமான பிட்ச்சை தயாரித்துள்ளதாக மறைமுகமாக விமர்சித்தார்.

அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் ஆரம்பத்திலேயே பென் டக்கெட், ஓலி போப், ஜாக் கிராவ்லி ஆகிய 3 முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்தார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த ஜானி பேர்ஸ்டோ, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா சுழலில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 57/3 என தடுமாறிய இங்கிலாந்து 112/5 என்று மீண்டும் சரிந்தது.

- Advertisement -

அப்போது முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 11.39 மணிக்கு ராஞ்சி பிட்ச் பற்றி பதிவிட்டது பின்வருமாறு. “பொதுவாக 2 அணிகள் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து முடிக்கும் வரை பிட்ச் பற்றி மதிப்பிடக் கூடாது என பழைய காலத்தவர்கள் சொல்வார்கள். ஆனால் இங்கே உண்மையை சொல்ல வேண்டும். இந்த பிட்ச் சுமாரானதாக இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: இப்போ அம்பயர் உங்களுக்கு சாதகமா இருக்காங்களா? பென் ஸ்டோக்ஸை கலாய்த்த கவாஸ்கர்.. காரணம் என்ன?

அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஜோ ரூட் நங்கூரமாக விளையாடி 106* ரன்கள் குவித்ததால் இங்கிலாந்து சரிவிலிருந்து மீண்டும் நல்ல ஸ்கோர் அடித்தது. அப்போது மீண்டும் 1.28 மணிக்கு பிட்ச் பற்றி ட்விட்டரில் மைக்கேல் வாகன் பதிவிட்டது பின்வருமாறு. “இந்த பிட்ச் இனிமேலும் மோசமானதாக இருக்கப் போவதில்லை” என்று கூறியுள்ளார். அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் அது நாற வாய் இது வேற வாயா என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement