போய் வாயை கழுவுங்க, இந்தியா மீது இப்போதே கண் வைத்த மைக்கேல் வாகன் – ரசிகர்கள் விளாசும் அளவுக்கு என்ன சொன்னாரு பாருங்க

Michael-Vaughan and IND Team
- Advertisement -

கடந்த 2022ஆம் ஆண்டு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் சாதாரண இருதரப்பு தொடர்களில் அதிரடியாக வென்று ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறிய இந்தியா அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் வெறும் கையுடன் வெளியேறியது. அதனால் காலம் கடந்த சீனியர் வீரர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இளம் அணியை உருவாக்கும் வேலைகள் நடைபெற்ற வருகிறது.

இருப்பினும் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் அனுபவமிக்க முதன்மை அணி களமிறங்க உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் 2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழ்ந்த நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு 3 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது. அந்த அடுத்தடுத்த தோல்விகளால் நம்பர் ஒன் இடத்தை கோட்டை விட்ட நியூசிலாந்து 3வது இடத்திற்கு சரிந்துள்ளது.

- Advertisement -

வாயை கழுவுங்க:
மறுபுறம் தொடர் வெற்றிகளால் ஏற்கனவே 3வது இடத்திலிருந்த இந்தியா கூடுதல் புள்ளிகளை பெற்று ஒருநாள் கிரிக்கெட்டில் ஐசிசி தர வரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து இந்த புதிய மகுடத்தை சூடியுள்ள இந்தியா இம்முறை 2011க்குப்பின் உலகக்கோப்பை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் உற்சாகத்தையும் இந்திய ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பார்முக்கு திரும்பியுள்ள நிலையில் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களும் கிடைத்து வருகிறார்கள். அது போக பும்ரா, ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத குறை தெரியாத அளவுக்கு முகமது சிராஜ், குல்தீப் யாதவ் போன்ற இளம் பவுலர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள். மேலும் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா கடந்த 2019க்குப்பின் சொந்த மண்ணில் நடைபெற்ற 7 ஒருநாள் தொடர்களிலும் தோற்காமல் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது.

- Advertisement -

மேலும் சமீபத்திய போட்டிகளில் அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடும் இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தது 300 – 350க்கும் மேற்பட்ட ரன்களை வெளுத்து வாங்கி வருகிறது. அதனால் 2015, 2019இல் சொந்த மண்ணில் கோப்பையை வென்ற அணிகளை போல் இம்முறை 2011க்குப்பின் மீண்டும் இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நீண்ட காலம் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடத் துவங்கியிருப்பதால் இந்த வருட உலகக் கோப்பையை நிச்சயமாக வெல்லும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டரில் கூறியுள்ளார். குறிப்பாக உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு அனல் பறக்கும் செயல்பாடுகளை இந்தியா வெளிப்படுத்தி வருவதாக அவர் பாராட்டியுள்ளார். இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் உங்கள் வாயை கழுவுங்கள் எங்களது வெற்றி பற்றி எங்களுக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

ஏனெனில் வரலாற்றில் இது போல அவர் வெற்றி பெறும் என்று சொன்ன அணிகள் பெரும்பாலும் வென்றதில்லை. அதே சமயம் இந்தியா தோற்கும் இங்கிலாந்து வெல்லும் என்று அவர் சொன்ன தருணங்களில் எல்லாம் இந்தியா வென்றுள்ளது. சொல்லப்போனால் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் கூட அவர் ட்வீட் போடுவதற்கு முன்பாக 212/0 என்ற நிலையிலிருந்து இந்தியா அவர் ட்வீட் போட்டதும் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து 293/5 என சரிந்து பின்னர் மீண்டெழுந்து 385/9 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க: இதை செய்ய ஐசிசிக்கு நீங்க எவ்ளோ பணம் கொடுத்தீங்க? பாகிஸ்தானை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள் – காரணம் என்ன

எனவே எங்களது அணி மீது கண் வைக்காமல் 2019 உலக கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து எப்படி கோப்பையை தக்க வைக்க வேண்டும் என்பதற்கு தேவையான ஆலோசனைகளை உங்களது அணிக்கு கொடுங்கள் என்று அவருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement