இதை செய்ய ஐசிசிக்கு நீங்க எவ்ளோ பணம் கொடுத்தீங்க? பாகிஸ்தானை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள் – காரணம் என்ன

Pakistan
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் பாகிஸ்தான் 2022 காலண்டர் வருடத்தில் சொந்த மண்ணில் கூட ஒரு டெஸ்ட் வெற்றி பதிவு செய்ய முடியாமல் திணறியது. குறிப்பாக மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கடைசி போட்டியில் தோற்று 1 – 0 (3) என்ற கணக்கில் மண்ணை கவ்விய பாகிஸ்தான் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு படி மேலே சென்று 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் தோற்று மோசமான சாதனை படைத்த அந்த அணி 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையிலும் ஃபைனலில் தோற்றது.

அதை விட ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்தப்பட்ட ராவில்பிண்டி மைதானம் வேகம், பவுன்ஸ், சுழல் என எதற்குமே கைகொடுக்காமல் 5 நாட்களும் ஒரே மாதிரியான வேகத்தில் தார் ரோடு போல இருந்தது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கிண்டல்களுக்கு உள்ளானது. அதனால் அதிருப்தியடைந்த ஐசிசி கடைசியில் அந்த மைதானம் சராசரிக்கும் குறைவாக இருந்ததாக மதிப்பீட்டு ஒரு கருப்பு புள்ளியை வழங்கியது. அந்த நிலையில் மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக அதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மீண்டும் பிட்ச் தார் ரோட் போல இருந்தது.

- Advertisement -

ஐசிசிக்கு எவ்ளோ பணம்:
ஆனால் இம்முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட்டை விளையாடி வரும் இங்கிலாந்து தார் ரோட் போல் இருந்த பிட்ச்சில் பாகிஸ்தான் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி முதல் நாளிலேயே 500+ ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. அத்துடன் முக்கியமான நேரத்தில் தைரியமாக டிக்ளேர் செய்த அந்த அணி இறுதியில் பாகிஸ்தானை சுருட்டி அபார வெற்றி பெற்று பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் 5 நாட்களில் 1500+ ரன்கள் அடிக்கும் அளவுக்கு மீண்டும் தார் ரோட் போல அந்த பிட்ச் இருந்ததால் கடுப்பான ஐசிசி மீண்டும் சராசரிக்கும் குறைவாக இருந்ததாக மதிப்பீட்டு கருப்பு புள்ளியை தண்டனையாக வழங்கியது.

அதனால் அடுத்த 5 வருடத்திற்குள் மேலும் 3 கருப்பு புள்ளிகளை பெற்றால் ராவல்பிண்டி மைதானம் சர்வதேச போட்டியை நடத்துவதற்கு தடைபெறும் என்ற பெரிய பின்னடைவை பாகிஸ்தான் வாரியம் சந்தித்தது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வாரியம் செய்த மேல்முறையீட்டை பரிசளித்த ஐசிசி 2வது முறையாக அந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 39 விக்கெட்கள் கிடைத்த தருணங்களில் 37 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டதை வீடியோ ஆதாரத்தில் கண்டுள்ளதாக கூறியுள்ளது.

- Advertisement -

அதனால் ராவல்பிண்டி மைதானத்திற்கு 2வது முறையாக வழங்கப்பட்ட கருப்பு புள்ளி ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் இந்த தீர்ப்பை வழங்குவதற்கு ஐசிசிக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்று பாகிஸ்தான் வாரியத்தை கிண்டலடித்து வருகிறார்கள். ஏனெனில் கடந்த டி20 உலக கோப்பையில் உண்மையாகவே இடுப்புக்கு மேலே வந்த பந்தை விராட் கோலி கேட்டார் என்பதற்காக நடுவர் பணத்தை பெற்றுக் கொண்டு கொடுத்ததாக சோயப் அக்தர் உள்ளிட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் வேண்டுமென்றே வம்பிழுத்தார்கள்.

அதே போல் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மழை குறுக்கிட்ட போது ஈர்ப்பதம் இருப்பது தெரிந்தும் இந்தியா வெல்ல வேண்டும் என்பதற்காக பணத்தை பெற்றுக்கொண்டு ஐசிசியும் நடுவர்களும் அவசர அவசரமாக போட்டியை மீண்டும் தொடங்கியதாக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் விமர்சித்தனர். அது மட்டுமல்லாமல் சமீப காலங்களாகவே ஏதாவது ஒரு தீர்ப்பு இந்தியாவுக்கு சாதகமாக வந்து விட்டால் உடனே ஐசிசி என்றால் இந்தியன் கிரிக்கெட் கவுன்சில் என்றும் பிசிசிஐ என்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் விமர்சிப்பது வழக்கமாகும்.

இதையும் படிங்க: IND vs NZ : அப்பாடா இப்போதான் எனக்கு திருப்தியா இருக்கு. ஜாலியான பாண்டியா – எதுக்கு தெரியுமா?

அந்த நிலையில் 1500+ ரன்கள் அடிக்கப்பட்ட ராவல்பிண்டி மைதானம் எப்படி பேட்டிங், பவுலிங் இரண்டுக்கும் சமமாக இருந்திருக்கும் என கேள்வி எழுப்பும் இந்திய ரசிகர்கள் முக்கிய தருணத்தில் இங்கிலாந்து தைரியமாக டிக்ளேர் செய்ததாலேயே அப்போட்டியின் முடிவு கிடைத்தது இல்லையென்றால் ட்ராவில் முடிந்திருக்கும் என கூறுகிறார்கள். ஆனாலும் இந்த முடிவு பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறியுள்ளதால் ஐசிசி என்றால் பிசிசிஐ அல்ல அது பிசிபி (பாகிஸ்தான் வாரியம்) என்பது நிரூபணமாகியுள்ளதாக இந்திய ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

Advertisement