அஷ்வின் துணை கேப்டனாக சரிபட்டு வரமாட்டார், அவர் தான் கரெக்ட் – மீண்டும் வன்மத்தை காட்டிய ஹர்பஜன், ரசிகர்கள் மாஸ் பதிலடி

Ashwin-Harbhajan
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பையும் 99% உறுதி செய்துள்ளது. முன்னதாகவே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அதிரடியாக விளையாட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட கேஎல் ராகுல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அந்த விமர்சனங்களை சமாளிக்க முடியாத பிசிசிஐ வேறு வழியின்றி அவருடைய துணை கேப்டன்சிப் பொறுப்புகளை மொத்தமாக பறித்துள்ளது.

அதனால் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் துணைக் கேப்டனாக செயல்படப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் ராகுலை விட கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து சத்தமின்றி அற்புதமான ஆல் ரவுண்டராக செயல்பட்டு வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் தகுதியானவர் என்று முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் சமீபத்தில் ட்விட்டரில் வெளிப்படையாக கூறியிருந்தார். மேலும் எப்போதுமே வித்தியாசமாக சிந்தித்து எதிரணியை சாய்க்கும் அளவுக்கு சாதுரியமாக செயல்படும் அஸ்வின் கிரிக்கெட்டின் சயின்டிஸ்ட் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ஏற்கனவே பாராட்டியிருந்தார்.

- Advertisement -

ரசிகர்கள் பதிலடி:
அந்த வகையில் 2008இல் தனது கேரியரின் கடைசி காலத்தில் கும்ப்ளே இந்தியாவை கேப்டனாக நடத்தியது போல் 36 வயதை கடந்தாலும் குறைந்தபட்சம் துணை கேப்டனாக செயல்படுவதற்கு அஸ்வின் முழு தகுதியானவர் என்று ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சுழல் பந்து வீச்சில் சொந்த மண்ணில் தாக்கத்தை ஏற்படுத்தும் அஸ்வின் வெளிநாட்டில் சுமாராக செயல்படுவதாக நினைக்கும் இந்திய அணி நிர்வாகம் இப்போதும் விளையாடும் 11 பேர் அணியில் நிரந்தர வாய்ப்பு கொடுப்பதில்லை. எனவே அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்தக்கூடிய ரவீந்திர ஜடேஜா போன்ற ஒருவர் தான் துணை கேப்டனாக இருக்க தகுதியானவர் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. ” என்னைப் பொறுத்த வரை சொந்த மண் அல்லது வெளிநாடு என அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் தொடர்ந்து விளையாடும் 11 பேர் அணியில் இடம் பிடிப்பவர் தான் துணை கேப்டனாக இருக்க வேண்டும். அந்த வகையில் ரவீந்திர ஜடேஜா தான் அந்த வீரர் என்று நான் உணர்கிறேன். அவருக்கு நாம் சற்று அதிகப்படியான பொறுப்புகளை கொடுக்க வேண்டும். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் சீனியராக இருப்பதால் இந்திய அணியின் கேப்டனாகும் தகுதி உடையவர். மேலும் ஆல் ரவுண்டராக அவருக்கு நிகராக இந்த உலகில் யாருமில்லை என்று கருதுகிறேன். அவர் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்” என்று கூறினார்.

- Advertisement -

ஆனால் தனது கேரியரின் கடைசி காலங்களில் சுமாராக செயல்பட்ட போது வாய்ப்பு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் நாளடைவில் சிறப்பாக செயல்பட்டு ஹர்பஜன் சிங் இடத்தை தனதாக்கி விட்டார். அதனால் அஷ்வின் ஆஸ்திரேலியா அணியினர் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறார் என்று வாசிம் ஜாஃபர் பாராட்டிய போது இல்லை நாக்பூர் பிட்ச் காரணமென்று பதில் கொடுத்தது உட்பட சமீப காலங்களாகவே அவர் மீது ஹர்பஜன் சிங் வன்மத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வரிசையில் இந்த கருத்தை பார்க்கும் ரசிகர்கள் 2022 ஐபிஎல் தொடரில் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் ரவீந்திர ஜடேஜா எந்தளவுக்கு மோசமாக செயல்பட்டு தன்னையும் சென்னை அணியும் வீழ்ச்சியடைய வைத்ததை மறந்து விட்டீர்களா என்று ஹர்பஜன் சிங்கிற்கு பதிலடி கொடுக்கிறார்கள். அதனால் சிக்கிய ஹர்பஜன் சிங் நான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுமில்லாமல் ஒருநாள் போட்டிகாலையும் சேர்த்து பேசுவதாக மீண்டும் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: ஆடவரை மிஞ்சி வரலாறு படைத்த மகளிரணி, கொண்டாடும் தெ.ஆ – அசுரனை வீழ்த்தி சரித்திரம் படைக்குமா?

“நன்கு உற்றுப் பார்த்தால் லோயர் ஆர்டரில் முன்பை விட நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் ஜடேஜா முன்னேறியுள்ளார். அதனால் தான் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளிலும் துணை கேப்டனாக செயல்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவரை விட சிறந்த வீரர்கள் நம்மிடம் இல்லை” என்று கூறினார்.

Advertisement