IND vs AUS : மீண்டும் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான கே.எல் ராகுல் – முதல் போட்டியிலேயே இப்படியா?

KL-Rahul
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 9-ஆம் தேதி இன்று நாக்பூர் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

IND vs AUS

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 177 ரன்களுக்கு அனைத்தும் விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்தியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இருந்து 77 ரன்கள் குவித்துள்ளது.

இதன்காரணமாக 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ள இந்திய அணியானது நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. இவ்வேளையில் இந்திய அணி தற்போதே இந்த போட்டியில் தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளது என்று கூறலாம். இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும் என்பதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

KL Rahul 1

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் துணைக்கேப்டனும், துவக்க வீரருமான கே.எல் ராகுல் மீண்டும் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். ஏனெனில் அண்மைக்காலமாகவே தனது பேட்டிங்கில் தடுமாற்றத்தை சந்தித்து வரும் அவர் இந்த டெஸ்ட் தொடரிலாவது அசத்தலாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் தனது திருமணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் இந்திய அணியில் இணைந்த அவர் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 71 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் வெறும் 20 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்து மீண்டும் ஒரு அற்புதமான வாய்ப்பை வீணடித்துக்கொண்டார்.

இதையும் படிங்க : 5 மாசம் கழிச்சி வந்து விளையாட ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. ஆனா – முதல் நாள் போட்டிக்கு பின் ஜடேஜா வெளிப்படை

அதே வேளையில் முழு ஃபார்முடன் இருக்கும் இளம் துவக்க வீரரான சுப்மன் கில் வாய்ப்பு கொடுக்கப்படாமல் வெளியே அமர வைக்கப்பட்டுள்ளதால் கே எல் ராகுலின் இந்த சொதப்பல் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement