5 மாசம் கழிச்சி வந்து விளையாட ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. ஆனா – முதல் நாள் போட்டிக்கு பின் ஜடேஜா வெளிப்படை

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது பிப்ரவரி 9-ஆம் தேதி இன்று நாக்பூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு சுருண்டது.

IND vs AUS

- Advertisement -

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 77 ரன்கள் குவித்துள்ளதால் 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 22 ஓவர்கள் பந்துவீசி 8 மெய்டன்கள் உட்பட 47 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இப்படி மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த போட்டியிலேயே 5 விக்கெட்டை கைப்பற்றி அசத்திய ஜடேஜா முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு தனது கம்பேக் குறித்தும் பேசியிருந்தார்.

Jadeja 1

இது குறித்து அவர் கூறுகையில் : முதல் நாளில் நான் இப்படி சிறப்பாக பந்து வீசியதில் மகிழ்ச்சி. 5 மாதங்களுக்குப் பிறகு நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது கடினமாக இருந்தது. ஆனாலும் நான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இதற்காக நிறைய பயிற்சியையும் கடின உழைப்பையும் மேற்கொண்டேன். அதுமட்டும் இன்றி சென்னையில் நடைபெற்ற ரஞ்சி போட்டியில் 42 ஓவர்கள் பந்து வீசினேன்.

- Advertisement -

அந்தப் போட்டி என்னால் மீண்டும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த மைதானத்தில் நல்ல பவுன்ஸ் இருந்தது. அதோடு எனது பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருந்ததனால் சிறப்பாக பந்துவீசினேன். அதே வேளையில் தொடர்ச்சியாக நான் சிறப்பான லெந்த்தில் பந்து வீசியதாலேயே விக்கெட்டுகளும் கிடைத்தது.

இதையும் படிங்க : வீடியோ : அலெக்ஸ் கேரியை அடக்கிய அஷ்வின் – அனில் கும்ப்ளே, கபில் தேவை மிஞ்சி ஆசிய அளவில் 2 புதிய வரலாற்று சாதனை

பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நான் பயிற்சி செய்யும்போது நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை பவுலிங் செய்து பயிற்சி எடுத்தேன். அதுதான் தற்போது நான் மீண்டும் நீண்ட நேரம் பந்துவீசவும் சரியான லெந்த்தில் பந்து வீசவும் உதவியது என ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement