வீடியோ : அலெக்ஸ் கேரியை அடக்கிய அஷ்வின் – அனில் கும்ப்ளே, கபில் தேவை மிஞ்சி ஆசிய அளவில் 2 புதிய வரலாற்று சாதனை

Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கியது. இத்தொடரில் குறைந்தது 3 போட்டிகளை வென்று வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்லும் லட்சியத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்கியுள்ளது. மறுபுறம் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்கும் முயற்சியுடன் ஆஸ்திரேலிய களமிறங்கியுள்ளது.

அந்த நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் சுழலுக்கு சாதகமான நாக்பூர் மைதானத்தில் ஆரம்பத்திலேயே அதிக ரன்களை குவித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஆகிய தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே தலா 1 ரன்னில் ஷமி மற்றும் சிராஜ் ஆகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாகி சென்றனர்.

- Advertisement -

லெஜெண்ட் அஷ்வின்:
அதனால் 2/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு 3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேனை 49 ரன்களில் காலி செய்த ஜடேஜா ஸ்டீவ் ஸ்மித்தை 37 ரன்களில் அவுட்டாக்கி பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 37, மாட் ரென்ஷா என மேலும் சில முக்கிய வீரர்களை தனது மாயாஜால சுழலில் அவுட்டாக்கினார். இடையே ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை அதிரடியாக விளையாடி 7 பவுண்டரியுடன் 36 (33) ரன்கள் விளாசி அச்சுறுத்தலை கொடுத்த அலெக்ஸ் கேரியை அஷ்வின் அவுட்டாக்கினார்.

இறுதியில் 177 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுழலுக்கு சாதகமான மைதானத்தில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா 9 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 56* (69) ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கம் கொடுத்து விளையாடி வருகிறார். ஆனால் அவருடன் பெயருக்காக 77 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர் அமைத்த ராகுல் தடவலாக செயல்பட்டு 20 (71) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அப்போது களமிறங்கிய அஷ்வின் ரன் எதுவும் எடுக்காத நிலைமையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த போது 77/1 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் ஆஸ்திரேலியாவை விட 100 ரன்கள் பின்தங்கியிருந்தாலும் வலுவான நிலையில் உள்ளது.

முன்னதாக இப்போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பின் 450 விக்கெட்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அந்த பட்டியல்:
1. அனில் கும்ப்ளே : 619
2. ரவிச்சந்திரன் அஷ்வின் : 452*
3. கபில் தேவ் : 434

- Advertisement -

அதை விட 89 போட்டிகளிலேயே 450 விக்கெட்களை எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 450 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளே சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் அனில் கும்ப்ளே 93 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் உலக அளவில் முத்தையா முரளிதரனுக்கு (80 போட்டிகள்) பின் அதிவேகமாக 450 விக்கெட்டுகள் எடுத்த 2வது வீரர் என்ற பெருமையும் அஷ்வின் பெற்றார். முன்னதாக ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250, 300, 350, 400 விக்கெட்டுகளை எடுத்திருந்த அவர் தற்போது அந்த சாதனை பட்டியலில் 450 விக்கெட் சாதனையும் இணைத்து தன்னை உளத்தரம் வாய்ந்த வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

Ravichandran Ashwin Kapil Dev

இதையும் படிங்க: IND vs AUS : ஹே எப்புட்றா? இந்தியாவை விட ஆஸிக்கு அதிகமாக சுழன்ற நாக்பூர் பிட்ச் – ஆனாலும் சரிந்து இந்தியா அசத்தியது எப்படி

அத்துடன் 3043 ரன்களையும் குவித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000+ ரன்கள் மற்றும் 450+ விக்கெட்டுகளை சாய்த்த முதல் இந்திய மற்றும் ஆசிய வீரர் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார். இதற்கு முன் ஜாம்பவான் கபில் தேவ் 5248 ரன்களை எடுத்தாலும் 434 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement