அப்ரிடி விலகியதால் ராகுல், ரோஹித் தப்பிச்சுட்டாங்க – பாக் ஜாம்பவான் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் இந்திய ரசிகர்கள்

Shaheen-afridi
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை வரலாற்றில் 15வது முறையாக வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்முறை 20 ஓவர் போட்டிகள் நடைபெறும் இந்த தொடரில் ஆசியாவின் டாப் 6 அணிகள் மோதுகின்றன. வரலாற்றில் நடைபெற்ற 14 தொடர்களில் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஆசிய அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2018இல் இதே துபாயில் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது.

அதனால் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்தியா இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துபாயில் எதிர்கொள்கிறது. இதே மைதானத்தில் கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை தோற்கடித்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடித்து சரித்திரத்தை மாற்றி எழுதியது.

- Advertisement -

கொக்கரிக்கும் பாகிஸ்தான்:
அதனால் அவமான தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குவதால் தக்க பதிலடி கொடுத்து பழி தீர்க்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுபோக கடந்த டி20 உலக கோப்பைக்கு பின் பங்கேற்ற நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என அத்தனை தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா வலுவான அணியாக திகழ்வதால் இம்முறை நிச்சயம் பாகிஸ்தான் உட்பட எஞ்சிய அணிகளைத் தோற்கடித்து 8வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர்.

ஆனால் கடந்த வருடம் தோற்கடித்ததை போல் இம்முறையும் இந்தியாவை மண்ணைக் கவ்வ வைக்கும் என்று பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கூறிவருகிறார்கள். அந்த நிலைமையில் ஆசிய கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி காயத்தால் விலகுவதாக அந்நாட்டு வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதனால் இந்த ஆசிய கோப்பையில் தோல்வியிலிருந்து இந்தியா தப்பிவிட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் நேற்றே சமூக வலைதளங்களில் அலைப்பறைகளை ஆரம்பித்தனர்.

- Advertisement -

ஏனெனில் கடந்த வருடம் நடந்த டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் அரைசதம் அடித்து வெற்றிக்கு போராடிய விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்து பாகிஸ்தானின் வரலாற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார். மேலும் 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதையும் வென்று நல்ல பார்மில் இருக்கும் அவர் கடைசி நேரத்தில் காயத்தால் விலகியதால் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற இந்திய வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அந்நாட்டு ரசிகர்கள் கொக்கரித்தனர்.

கொந்தளிக்கும் ரசிகர்கள்:
அப்படிப்பட்ட நிலையில் சாஹீன் அப்ரிடி விலகியதால் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிம்மதி அடைந்துள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் கேப்டன் வக்கார் யூனிஸ் வெளிப்படையாகவே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்கள் தான் நாகரீகம் இல்லாமல் பேசுகிறார் என்றால் ஜாம்பவான் அந்தஸ்து பெற்றுள்ள இவரும் இப்படிக் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளாரே என்று கொந்தளிக்கின்றனர்.

- Advertisement -

மேலும் ஆசிய கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஷஹீன் அப்ரிடியை விட திறமை வாய்ந்த ஜஸ்பிரித் பும்ரா விலகியபோது இந்தியாவிலிருந்து யாருமே பாகிஸ்தானை பற்றி எதையும் சொல்லவில்லையே இன்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். அத்துடன் சமீபத்திய இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கூட இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லியிடம் ரோகித் சர்மா போன்ற இடதுகை பவுலர்களிடம் தடுமாறியது உண்மைதான் என்றாலும் பெரும்பாலான போட்டிகளில் அவர்களை வெளுத்து வாங்கியதை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

குறிப்பாக கடந்த 2018 ஆசிய கோப்பையில் இதே ஷாஹீன் அப்ரிடி, முகமத் அமீர் போன்றவர்களை ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் வெளுத்து வாங்கிய வீடியோக்களையும் இந்திய ரசிகர்கள் பதிலடியாக கொடுக்கின்றனர்.

இதையும் படிங்க : ஹெல்மெட் போட்டுகொண்டு மனைவியுடன் ஸ்கூட்டரில் மும்பையை சுற்றிய விராட் கோலி – வைரல் வீடியோ

அத்துடன் பலமான இந்தியாவுக்கு எதிராக அப்ரிடி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்ற என்ற பயத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே வடிவேலு போல் தைரியமாக பேசுவதாகவும் பாகிஸ்தானுக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். அதைவிட 1992 முதல் வரலாற்றில் நடந்த அத்தனை உலக கோப்பைகளில் தோற்றுவிட்டு ஒரேஒரு முறை வென்று விட்டோம் என்பதற்காக பாகிஸ்தான் கர்வத்துடன் பேசுவதாகவும் இந்திய ரசிகர்கள் பதிலுக்கு கலாய்க்கின்றனர்.

Advertisement