உங்க பேட்டிங் ரொம்ப ஒர்ஸ்ட். ஒன்டே மேட்ச்க்கு நீங்க செட்டாக மாட்டீங்க – அதிரடி வீரரை விளாசும் ரசிகர்கள்

SKY
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடி இந்திய அணியானது தோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஆறாவது முறையாக ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பிறகு பல்வேறு விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள வேளையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவின் ஆட்டம் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடரின் இறுதிப் போட்டியில் சூரியகுமார் யாதவின் செயல்பாடு மூளையற்ற தனமாக இருக்கிறது என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். டி20 கிரிக்கெட்டில் அசத்தலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் சூரியகுமார் யாதவ் இப்படி உலக கோப்பை இறுதிப்போட்டியின் போது 28 பந்துகளை சந்தித்து ஒரே ஒரு பவுண்டரியுடன் 18 ரன்கள் குவித்தது தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

வழக்கம் போலவே சூரியகுமார் யாதவ் இந்த போட்டியிலும் அதிரடி காட்டி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்க விட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணிக்கு இன்னும் கூடுதலாக ரன்களை சேர்த்து எதிரணிக்கு அழுத்தத்தை கொடுத்திருக்க முடியும். ஆனால் இந்த இறுதி போட்டியின் அழுத்தத்தை தாங்க முடியாமல் சூரியகுமார் யாதவ் வெறும் 64 ஸ்ட்ரைக் ரேட் உடன் 18 ரன்களை மட்டுமே குவித்தது ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இதுல நாம அவமானப்பட ஒன்னுமில்ல.. காரணம் அது தான்.. இந்திய அணி தோல்வி பற்றி கவாஸ்கர் கருத்து

மேலும் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை சூழலை கருத்தில் கொண்டு நிதானமாக விளையாட வேண்டியது அவசியம் என்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு சூரியகுமார் யாதவ் செட்டாக மாட்டார் என்றும் ரசிகர்கள் தங்களது காட்டமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement