ராயுடுவுக்கு என்ன நடந்ததோ அதுதான் இவருக்கும் நடக்குது. இந்திய அணி வீரருக்கு ஆதரவாக – ரசிகர்கள் கோபம்

Samson
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி துவங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று இந்த இந்திய அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது தற்போது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணியில் அவ்வப்போது வாய்ப்புகளை பெற்று வரும் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டாலும் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகிறார்.

எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக சஞ்சு சாம்சனுக்கு பல்வேறு தொடர்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் உலகக்கோப்பை தற்போது அருகில் வந்துள்ள வேளையில் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ருதுராஜ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இப்படி சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருவது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஒரு சில ரசிகர்கள் 2019-ஆம் ஆண்டு ராயுடுவிற்கு எவ்வாறு நடந்ததோ? அதேபோன்று தற்போது சஞ்சு சாம்சனுக்கு நடக்கிறது என்று கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : சச்சினை காப்பாத்துறதுக்காக இதை செய்றீங்களா.. பிசிசிஐ – அஜித் அகர்கரை விளாசும் விராட் கோலி ரசிகர்கள்.. காரணம் இதோ

மேலும் ஒரு சிலே சாம்சன் வேண்டும் என்றே நிராகரிக்கப்பட்டு வருகிறார் என்றும் இரண்டு ஆண்டுகளாக விளையாடி வந்த ஒருவரை உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக புதிய வீரர்களை ஆட வைப்பது தவறு என்றும் ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement