சஞ்சு சாம்சனை செலக்ட் பண்ணல ஓகே.. ஆனா இவரையும் சேக்காதது ரொம்ப பெரிய தப்பு – ரசிகர்கள் கோபம்

Samson-and-Chahal
- Advertisement -

கடந்த அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கிய ஐ.சி.சி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று முன்தினம் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதி போட்டிக்கு சென்ற வேளையில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த தோல்வி ஏற்படுத்திய வருத்தம் இன்னமும் இந்திய ரசிகர்களிடம் இருந்து மறையாத வேளையில் அடுத்ததாக இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது நாளை மறுதினம் நவம்பர் 23-ஆம் தேதி துவங்கி டிசம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

- Advertisement -

இந்த டி20 தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வேளையில் நேற்று இந்த டி20 தொடர்கான இந்திய அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு தற்போது இந்த தொடருக்காக வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

மேலும் இந்த டி20 தொடரில் முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்புகளை மறுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே சஞ்சு சாம்சனுக்கு இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

இவ்வேளையில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலும் தேர்வு செய்யப்படாமல் போனதும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்பது மட்டுமின்றி கடந்த சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பவுலராகவும் அவர் சாதனை படைத்திருந்தார்.

இதையும் படிங்க : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல்ல. இந்தியா ஆஸ்திரேலியா டி20 தொடரை எந்த சேனலில் பாக்கலாம் – போட்டி எத்தனை மணிக்கு துவங்கும்?

அதோடு டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடி வந்த அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தும் இந்த தொடரில் அவரை தேர்வு செய்யாதது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது போன்ற தொடரிலாவது அவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்கி இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement