இந்தியாவுல எத்தனையோ பிட்ச் இருந்தும் பைனல் மேட்ச்ச ஏன் அங்க வச்சீங்க – கொந்தளித்த ரசிகர்கள்

Lose
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணியானது ஆறாவது முறையாக ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரினை வென்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்றுக்கூடிய முடியாத வேளையில் அனைவருமே இந்த தோல்வியை நினைத்து வருத்தம் அடைந்துள்ளனர்.

இந்த உலகக்கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது தற்போது பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறி உள்ளது.

- Advertisement -

மேலும் இந்த தோல்விக்கான பல காரணங்களை பலரும் தங்களது விமர்சனங்களாக கூறி வரும் வேளையில் அகமதாபாத் மைதானமும் இந்த தோல்விக்கு ஒரு காரணமாக பேசப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் இருக்கும் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற மைதானங்கள் இந்திய அணிக்கு அதிக சாதகமாக இருக்கும் மைதானங்களாக பார்க்கப்படும் வேளையில் இறுதி போட்டியினை அகமதாபாத்தில் நடத்தியது ஏன்? என்ற கேள்வி எழும்பியுள்ளது.

ஏனெனில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அகமதாபாத் நகரில் உள்ள அந்த கடினமான மைதானத்தில் ஏன் இறுதிப்போட்டியை நடத்தினார்கள்? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

- Advertisement -

குறிப்பாக இந்த தொடரில் இதுவரை 300 ரன்களை அந்த மைதானத்தில் எட்ட முடியாத வேளையில் அந்த பிட்சில் ஏன் இறுதிப்போட்டியினை நடத்த வேண்டும் என்று பலரும் தங்களது கேள்விகளை முன் வைத்துள்ளனர். மேலும் இந்திய அணிக்கு சாதகமான பல மைதானங்கள் இருந்தும் எதற்காக இப்படி ஒரு ஏற்பாட்டினை பிசிசிஐ செய்தார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க : என்னய்யா நியாயம்? இப்போ கூட இந்த சாதாரண சீரிஸ்ல கூட அவருக்கு ஏன் சான்ஸ் தரல.. ரசிகர்கள் கோபம்

இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக மைதானத்தின் தன்மையை நேரில் பார்த்த ரோஹித் சர்மா கூட : பிட்சில் புல் சற்று இருப்பதாக கூறியிருந்தார். அதனால் ஆடுகளத்தின் தன்மையையும் அவர்கள் கணிக்க முடியாமல் சென்று இறுதியில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. சொந்த மண்ணில் இப்படி இந்தியா பெற்ற தோல்விக்கு அகமதாபாத் மைதானமும் ஒரு பெரிய காரணம் என்றும் சில பல தனிப்பட்ட நபர்களின் முடிவினாலே இப்படி இந்திய அணி தோல்வியை தழுவி கோப்பையை தவறவிட்டது என்றும் ரசிகர்கள் கொந்தளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement