என்னய்யா நியாயம்? இப்போ கூட இந்த சாதாரண சீரிஸ்ல கூட அவருக்கு ஏன் சான்ஸ் தரல.. ரசிகர்கள் கோபம்

Sanju Samson 2
- Advertisement -

நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீப் மற்றும் செமி ஃபைனல் சுற்றில் அபாரமாக செயல்பட்ட இந்தியா அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டு இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

இந்த சூழ்நிலையில் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சொந்த மண்ணில் இந்தியா விளையாட உள்ளது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பை தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:
அவர்களுக்கு பதிலாக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் சூரியகுமார் யாதவ் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ருதுராஜ் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். அவர்களது தலைமையில் ஜெய்ஸ்வால் திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர் போன்ற முழுவதுமாக இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ள இந்த அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது ஏற்கனவே கோபத்தில் இருக்கும் ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் 2015இல் அறிமுகமாகி 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்த அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மனம் தளராமல் போராடி கடந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் இந்தியாவுக்காக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக சூரியகுமாரை விட ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சராசரியை கொண்டிருந்தும் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தடுமாறினார் என்பதற்காக அவரை 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பை அணியில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு கழற்றி விட்டது.

- Advertisement -

சரி அவரும் கிடைத்த வாய்ப்புகளில் அழுத்தமான நேரங்களில் அசத்துவதில்லை என்பதால் உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படாததில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால் தற்போது எப்படியும் 2வது தர ஆஸ்திரேலியா அணி களமிறங்கப் போகும் அழுத்தமற்ற இந்த டி20 தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததே ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: விராட், ரோஹித்துக்கு ஓய்வு.. ஆஸி டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி.. லிஸ்ட் இதோ

இதற்கிடையே 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான அணியிலும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை. குறிப்பாக விக்கெட் கீப்பராக தேர்வாகியுள்ள ஜித்தேஷ் சர்மாவை விட சஞ்சு சாம்சன் அனுபவத்திலும் தரத்திலும் மேன்மையானவராகவே இருக்கிறார். அப்படி இருந்தும் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த முக்கியமற்ற தொடரில் கூட அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் கழற்றி விட்டுள்ள தேர்வு குழுவை தற்போது ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement