- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோக்கப்போறோம்னு தெரிஞ்சே தவறு செய்த ஷாஹின் அப்ரிடியை திட்டிய இந்திய ரசிகர்கள் – என்ன நடந்தது?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான மிக முக்கியமான லீக் போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பெற்று அசத்தியது.

ஷாஹீன் அப்ரிடியை திட்டிய இந்திய ரசிகர்கள் :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 241 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி எளிதாக 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 244 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடியை துபாய் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் திட்டிய விவகாரம் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படி பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடியை இந்திய ரசிகர்கள் திட்ட என்ன காரணம்? என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணி ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி எளிதாக சென்று கொண்டிருந்த வேளையில் விராட் கோலி சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அப்போது விராட் கோலியின் சதத்திற்கு 15 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் வேண்டுமென்றே விராட் கோலி சதம் அடிக்கக்கூடாது என்பதற்காக ஷாஹீன் அப்ரிடி தாங்கள் தோற்பதையும் பொருட்படுத்தாமல் ஒயிடு பந்துகளாக வீசிக்கொண்டிருந்தார்.

- Advertisement -

இதனை கவனித்த ரசிகர்கள் விராட் கோலி சதத்தை தடுக்கவே அவர் அவ்வாறு செயல்படுகிறார் என்பதை உணர்ந்து “லூசர் லூசர்” அதாவது தோல்வி அடைபவர் என்ற கருத்தை முன்வைத்து அவரை கடுமையாக திட்டினர்.

இதையும் படிங்க : பணத்தை வெச்சு உருவான பாபர் கிடையாது.. உண்மையான கிங் கோலி இதனால் தான் சிறந்த பேட்ஸ்மேன்.. ஹபீஸ் பாராட்டு

இப்படி ஒருபுறம் ஷாஹீன் அப்ரிடி வேண்டுமென்றே விராட் கோலி சதம் அடிக்க கூடாது என்று ஒயிடு பந்துகளை வீசியிருந்தாலும் அதற்கடுத்த ஓவரில் வெற்றிக்கு அருகில் இந்திய அணி இருந்த போது பவுண்டரி அடித்து இந்திய அணி வெற்றிக்கு அழைத்துச்சென்ற விராட் கோலி தனது சதத்தையும் பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -