பணத்தை வெச்சு உருவான பாபர் கிடையாது.. உண்மையான கிங் கோலி இதனால் தான் சிறந்த பேட்ஸ்மேன்.. ஹபீஸ் பாராட்டு

Mohammed Hafeez
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சௌத் ஷாக்கீல் 69 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 20, விராட் கோலி சதத்தை அடித்து 100*, சுப்மன் கில் 46, ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர். அதனால் இந்தியா செமி ஃபைனல் செல்லும் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. மறுபுறம் அடுத்தடுத்த தோல்விகளால் பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

- Advertisement -

உண்மையான கிங்:

முன்னதாக இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் கிங் என்று அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடும் பாபர் அசாம் 23 (26) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதனால் பணத்தை செலவழித்து சமூக வலைதளங்களில் கிங் என்ற பட்டத்தை உருவாக்கிய பாபர் அசாம் உண்மையில் அதற்கு சொந்தக்காரர் கிடையாது என்று முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி பெரிய இடத்தில் அசத்தக்கூடியவர். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போது உங்களுக்கு அசத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவுக்கு எதிராக சோயப் மாலிக் நன்றாக பௌலிங் செய்ததாலும் சாகித் அப்ரிடி சிக்ஸர்கள் அடித்ததாலும் நட்சத்திரங்களாக உருவெடுத்தார்கள். அதே போல விராட் கோலி காத்திருந்து அது போன்ற தருணங்களை பயன்படுத்திக் கொள்கிறார்”

- Advertisement -

உலகின் சிறந்த கிங் கோலி:

“தொடர்ந்து நேர்மறையான மனநிலையைக் கொண்டுள்ள அவர் இந்தியாவுக்காக விளையாடுவது மட்டுமின்றி என்னுடைய நாட்டுக்காக வெற்றியையும் பெற்றுக் கொடுப்பேன் என சிந்திக்கிறார். அதனாலேயே அவர் உலகின் மகத்தான பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். எதார்த்தமான வாழ்வில் யாராவது கிங் என்று அழைப்பதற்கு தகுதியானவர் என்றால் அது விராட் கோலி”

இதையும் படிங்க: விராட் கோலி சதத்துக்காக நான் கணக்கு போட்டேன்.. 50 ஓவருக்கு அப்றமும் இது வேற லெவல்.. அக்சர் படேல்

“பாபர் அசாம் கிடையாது. விராட் கோலியின் செயல்பாடுகளை பாருங்கள். அவர் உலகம் முழுவதிலும் அசத்தியுள்ளார். பணத்துக்காக மக்கள் தொடர்பு நிர்வாகிகளை வைத்து கிங்காக வரவில்லை. அவர்களை அழைத்து விராட் கோலியின் செயல்பாடுகளை கண்ணாடியில் காட்டுங்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களது அடுத்தப் போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கி

Advertisement