அவங்க 2 பேரையும் எதுக்கு டீம்ல எடுத்தீங்க? இப்படி சும்மா உக்கார வைக்கவா? – அணித்தேர்வை விளாசும் ரசிகர்கள்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது இன்று டிசம்பர் நான்காம் தேதி டாக்கா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்தியானது 41.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் எழுந்து 186 ரன்களை மட்டுமே குவித்தது.

IND vs BAN Rohit Sharma Liton Das

- Advertisement -

இதன் காரணமாக 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் மட்டும் 73 ரன்களை குவித்தார். அவரை தவிர்த்து மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

இந்நிலையில் இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா ஐந்து பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலருடன் களமிறங்கியது தவறு என்று ஏற்கனவே ரசிகர்கள் பலரும் விமர்சித்து வரும் வேளையில் இந்திய அணியைச் சேர்ந்த மிடில்ஆர்டர் வீரர்கள் இருவரை அணியில் சேர்த்து விட்டு அவர்களை எடுக்காதது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

Rahul-Tripathi

அந்த வகையில் சமீப காலமாகவே கடந்த பல தொடர்களாக இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ரஜத் பட்டிதார் மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகியிருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களை பிளேயிங் லெவனில் எடுக்காமல் வெளியே அமர வைத்து வருகின்றனர்.

- Advertisement -

இப்படி திறமையான இரண்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருந்தும் இந்த போட்டியில் கூட அவர்களை விளையாடும் பிளேயிங் லெவனில் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஐந்து பேட்ஸ்மேன்கள் மட்டுமே கலந்துகொண்டு விளையாடிய இந்த போட்டியில் இந்திய அணி இன்று பெரிய தடுமாற்றத்தை சந்தித்தது.

இதையும் படிங்க : IND vs BAN : முதல் இன்னிங்ஸிலேயே வங்கப்புலிகள் கொடுத்த அதிர்ச்சி – அவமானத்தை தவிர்க்குமா இந்தியா? ஸ்கோர் இதோ

அதோடு இன்றைய போட்டியில் இந்திய அணியால் 200 ரன்களை கூட அடிக்க முடியாமல் சுருண்டதால் திரிப்பாதி அல்லது பட்டிதார் ஆகிய இருவரில் ஒருவரை சேர்த்து இருக்கலாம் என்றும் ரசிகர்கள் தங்களது கண்டனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement