இனிமே 3 ஆவது இடம் உங்களுக்கு தான்.. தரமான சம்பவத்தை செய்த சுப்மன் கில் – இதை நோட் பண்ணீங்களா?

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி ராஞ்சி நகரில் துவங்கி இன்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் கடைசி இன்னிங்சில் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 52 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

- Advertisement -

மேலும் இனி சுப்மன் கில் தான் தொடர்ச்சியாக மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்ற ஆதரவும் பெருகி வருகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 38 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்து இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸின் போது அணியை இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அந்த வகையில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து ஆடிய சுப்மன் கில் 124 பந்துகளை சந்தித்து இரண்டு சிக்ஸர்களுடன் 52 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கிட்டத்தட்ட 40 ரன்கள் வரை பவுண்டரியையே அடிக்காமல் அணியின் சூழலை புரிந்து கொண்டு துருவ் ஜுரேலுடன் இணைந்து ஸ்டிரைக் ரொட்டேட் செய்த சுப்மன் கில் இறுதியாக இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு 100% உறுதி என்கிற போது தான் இரண்டு சிக்ஸர்களை விளாசினார்.

இதையும் படிங்க : கோலி இல்லாமலேயே சாதித்த இந்தியா.. முதல் முறையாக இரட்டை அடி வாங்கிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து

அதற்கு முன்னர் வரை சரியாக பந்துகளை இடைவெளிகளில் தட்டி விட்டு சிங்கிள்ஸ் ஓடவே முயற்சி செய்தார். அவரது இந்த தெளிவான ஆட்டத்தின் மூலம் அவருடைய முதிர்ச்சி தெரிவதால் இனியும் நிச்சயம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பார் என ரசிகர்கள் அவருக்கு ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement