IND vs BAN : என்ன இருந்தாலும் அவர் கிரேட் தாங்க. ரோஹித் சர்மாவை பாராட்டும் ரசிகர்கள் – என்ன காரணம்?

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று டாக்கா மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியின் கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற ஆட்டம் இறுதியில் வங்கதேச அணிக்கு சாதகமாக முடிவு பெற்றது. 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியானது போட்டியின் முடிவில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை எடுத்து 266 ரன்கள் குவித்ததால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 271 ரன்கள் குவித்த வேளையில் அடுத்ததாக 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது இந்திய அணி 42.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்திருந்தபோது ஒன்பதாவது வீரராக கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினார்.

ஏற்கனவே ஏற்பட்ட காயம் காரணமாக பீல்டிங் செய்யாமல் இருந்த ரோஹித் சர்மா துவக்க வீரராக களமிறங்காமல் இருந்தார். அதோடு ஒவ்வொரு வீரரும் ஆட்டம் இழந்து வெளியேற அவரது பெயர் ஸ்கோர் கார்டில் பின்னாடி இருந்து கொண்டே இருந்தது. இறுதியில் ஒன்பதாவது வீரராக களமிறங்கிய அவர் வெற்றிக்கு 44 பந்துகளில் 65 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்து நிலையிலும் லாவகமாக அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

Rohit Sharma 1

ஆனால் அவருடன் எதிரில் இருந்த வீரர்கள் கை கொடுக்காத காரணத்தினால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 40 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தபோதும் கூட மனம் தளராமல் இரண்டு ஓவர்களில் கிட்டத்தட்ட 35 ரன்கள் வரை அடித்த ரோஹித் 28 பந்துகளில் 51 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்று 5 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு கவுரவமான தோல்விக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே கேட்ச் பிடிக்க முயன்று கட்டை விரலில் காயம் பட்டுக்கொண்ட அவர் கையில் ரத்தம் வந்ததால் பரிசோதனை மேற்கொண்டு கையில் தையல்கள் போடப்பட்ட வேளையிலும் ஒரு கேப்டனாக அணி இக்கட்டான வேளையில் சிக்கி இருந்ததால் காயத்தையும் பொருட்படுத்தாமல் அவர் களமிறங்கி விளையாடியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதோடு ரோஹித்தின் இந்த மனப்பான்மை நினைத்து ரசிகர்கள் அவரை பாராட்டியும் வருகின்றனர்.

இதையும் படிங்க : வீடியோ : அதே அதிரடி பேட்டிங் ஸ்டைல், கிரிக்கெட்டில் கால் தடம் பதித்த குட்டி விரேந்தர் சேவாக் – ரசிகர்கள் மகிழ்ச்சி

அதாவது இந்திய அணிக்கு இப்படி ஒரு இக்கட்டான சூழலில் சிக்கிய வேளையில் கேப்டனாக பொறுப்பினை உணர்ந்து தனது கையில் அடிபட்டதை கூட பொருட்படுத்தாமல் டேப் அணிந்து விளையாடிய ரோகித்தின் இந்த கிரிக்கெட் உணர்வினை நாங்கள் மதிக்கிறோம் அவர் உண்மையிலேயே கிரேட் தான் என்று ரசிகர்கள் ரோகித்தை புகழ்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement