பயிற்சி போட்டியில் கூட இவ்வளவு பொறுப்பா இருக்கீங்களே! விராட் கோலியின் செயலை – பாராட்டும் ரசிகர்கள்

Virat-Kohli
- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய நாட்டிற்கு பயணத்துள்ள இந்திய அணியானது அங்கு உள்ளூர் அணிகளுக்கு எதிராக முதலில் பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாடியது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் இன்று இந்திய அணி பங்கேற்று விளையாடியது. அந்த வகையில் இன்றைய பயிற்சி போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடி வந்ததால் எளிதாக இந்த இலக்கினை விரட்டி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் போட்டியின் திருப்புமுனையாக கடைசி இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி அந்த கடைசி இரண்டு ஓவர்களையும் சேர்த்து வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்ததால் 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 19-ஆவது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் மற்றும் 20-ஆவது ஓவரை வீசிய முகமது ஷமி ஆகிய இருவரும் சிறப்பாக பந்து வீசி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.

Virat Kohli Fielding

அதே வேளையில் இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது யாதெனில் முக்கியமான கட்டத்தில் டிம் டேவிடை ஒரே கையால் பந்தினை பிடித்து விராட் கோலி அடித்த த்ரோவும், அதே போன்று பேட் கம்மின்ஸ் அடித்த பந்தை பவுன்டரி லைனில் ஒரே கையால் எகிறி பிடித்த அசத்தலான கேட்ச்சும்தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -

பயிற்சி போட்டியில் பொதுவாகவே வீரர்கள் முழு முயற்சியுடன் செயல்பட மாட்டார்கள். ஏனெனில் அப்படி பயிற்சி போட்டியில் ரிஸ்க் எடுக்கும் போது ஏதேனும் காயம் ஏற்பட்டால் முழு தொடரை கூட இழக்க நேரிடலாம்.

இதையும் படிங்க : ஜாம்பவான் கவாஸ்கரிடம் பிறந்தநாள் பரிசு பெற்ற பாகிஸ்தான் கேப்டன் – உரையாடல்களும் வீடியோவும் இதோ

ஆனால் பயிற்சி போட்டியில் கூட தனது 100 சதவீத பங்களிப்பை வழங்கிய விராத் கோலி மிகச் சிறப்பாக பீல்டிங் செய்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களும் சமூகவலைதளத்தில் விராட் கோலியை மிகவும் புகழ்ந்து பல்வேறு வகையில் பாராட்டுகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement