அவங்க 2 பேரையும் எதுக்கு டீம்ல எடுத்தீங்க? இப்படி அசிங்கப்படுத்ததானா? – ரசிகர்கள் கொதிப்பு

IND
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற வங்கதேச அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று சட்டகிராம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

IND vs BAN Rohit Sharma Liton Das

- Advertisement -

இந்த தொடரின் இரண்டாவது ஆட்டத்தின் போது கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தீபக் சாகர் ஆகியோர் காயமடைந்து வெளியேறியதால் இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷனும், தீபக் சாஹருக்கு பதிலாக குல்தீப் யாதவும் இடம் பிடித்துள்ளதாக இந்திய அணியின் தற்காலிக கேப்டன் கே.எல் ராகுல் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை அடுத்து தற்போது இந்திய அணி தேர்வின் மீது கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதற்கு காரணம் யாதெனில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாட இளம் வீரர்களான ரஜத் பட்டித்தார் மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகியோர் இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் கடந்த சில தொடர்களாகவே இந்திய அணியில் இடம் பிடித்து வரும் பட்டித்தார் மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகிய இருவரும் தங்களது அறிமுக வாய்ப்புக்காக இதுவரை காத்திருக்கின்றனர்.

Rahul Tripathi and Rajat Patidar

அதேவேளையில் இதுவரை அவர்கள் இருவருக்கும் ஒரு போட்டியில் கூட அறிமுக வாய்ப்பு அளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடி தங்களது திறமையினை நிரூபித்த பின்னரே தேசிய அணியில் அவர்களுக்கு இடம் கிடைத்து இருந்தாலும் இன்றளவும் அவர்களுக்கு ஒரு போட்டியில் கூட அறிமுக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

அதேபோன்று கடந்த இரண்டு போட்டிகளில் கூட இந்திய அணியின் தோல்விக்கு மிடில் ஆர்டரில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் குறையாக இருந்ததே காரணமாக பார்க்கப்பட்ட வேளையில் இந்த போட்டியிலாவது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்த்து இருக்கலாம் என்றும் அந்த வகையில் இந்த இரண்டு வீரர்களில் ஒருவருக்காவது வாய்ப்பினை வழங்கி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : 1.5 கோடி அடிப்படை தொகைக்கு கூட ஏலம் போகமாட்டார்கள் என்று சொல்லக்கூடிய 3 நட்சத்திர வீரர்கள்

மேலும் இப்படி ஒவ்வொரு தொடரிலும் அவர்களை வெளியில் அமர வைத்து அசிங்க படுத்துவதை விட அவர்களை அணியில் எடுக்காமலேயே இருந்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement