ஐபிஎல் 2023 : 1.5 கோடி அடிப்படை தொகைக்கு கூட ஏலம் போகமாட்டார்கள் என்று சொல்லக்கூடிய 3 நட்சத்திர வீரர்கள்

ENg vs RSA jason roy
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் இந்தியாவிலேயே நடைபெறுகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் நிலையில் அனைத்து 10 அணி நிர்வாகங்களும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நடைபெறும் ஏலத்தில் 2 கோடி, 1.5 கோடி, 1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 20 லட்சம் என 6 அடிப்படை விலை பிரிவுகளின் கீழ் களமிறங்கும் 991 வீரர்களில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்குவதற்கு 10 அணிகளும் தயாராகியுள்ளன.

அதில் 1.5 கோடி பிரிவில் எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் இடம் பெறாத நிலையில் 10 வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளார்கள். அதில் சில வீரர்கள் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருப்பதால் அடிப்படை விலைக்குக் ஏலம் கூட போக மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. சீன் அபோட்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த 2014ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானாலும் 8 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடும் அளவுக்கு சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். இருப்பினும் கடந்த 2015ஆம் ஆண்டு 2 போட்டிகளிலும் 2022ஆம் ஆண்டு 1 ஐபிஎல் போட்டியிலும் விளையாடிய அவர் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்து 11.56 என்ற படு மோசமான எக்கனாமியில் செயல்பட்டார்.

ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டிலும் 116 போட்டிகளிலும் 142 விக்கெட்டுகளை 8.61 என்ற சுமாரான எக்கனாமியில் தான் எடுத்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே 30 வயதை கடந்து விட்ட அவர் இந்திய ஆடுகளங்களில் சுமாராக செயல்பட்டதால் 1.5 கோடிக்கு எந்த அணியும் வாங்க விரும்பாது என்றே கூறலாம். ஏனெனில் இவரை விட குறைந்த விலையில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இதே ஏலத்தில் களமிறங்குகிறார்கள்.

- Advertisement -

2. டேவிட் மாலன்: இங்கிலாந்து சேர்ந்த அதிரடி வீரரான இவர் 55 போட்டிகளில் 1748 ரன்களை 135.71 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து ஒரு கட்டத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக ஜொலித்தார். மேலும் ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டில் 7895 ரன்களை 130க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் கடந்த 2021 சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

இருப்பினும் 1 போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்று 29 (29) ரன்களை எடுத்த அவரை 2022 சீசனுக்கான ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை. அதனால் இம்முறையும் 35 வயதை கடந்து விட்ட இவரை 1.5 கோடிக்கு வாங்குவதற்கு பதில் இளம் வீரர்களை இன்னும் குறைந்த விலைக்கு வாங்குவதற்கு அனைத்து அணிகளும் முயற்சிக்கலாம்.

- Advertisement -

1. ஜேசன் ராய்: இங்கிலாந்தின் மற்றொரு அதிரடி தொடக்க வீரரான இவர் ஒரு கட்டத்தில் சரவெடியாக பேட்டிங் செய்து உலக அளவில் தனக்கென்று ரசிக்கப்பட்டாளத்தை உருவாக்கினார்.

இருப்பினும் கடந்த 2020ஆம் ஆண்டு 1.5 கோடிக்கு டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர் கடைசி நேரத்தில் சொந்தக் காரணங்களுக்காக விலகினார். அதே போல் 2022 சீசனில் குஜராத் அணிக்காக பெரிய தொகைக்கு வாங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக கடைசி நேரத்தில் வெளியேறினார்.

இதையும் படிங்க: எல்லாரும் டிகே ஆகிட முடியுமா, வாயை விட்டு வம்பில் மாட்டிய ஆர்சிபி அணி – கலாய்த்து தள்ளும் ரோஹித் ரசிகர்கள், நடந்தது என்ன

அது போக சமீப காலங்களில் பார்மை இழந்து ரன்களை குவிக்க தடுமாறிய அவரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து நிர்வாகம் கழற்றி விட்டது. அதனால் 32 வயதாகும் அவர் சுமாரான பார்ம் மற்றும் வாங்கினால் உறுதியாக விளையாடுவாரா என்ற நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால் எந்த அணியும் 1.5 கோடி என்ற பெரிய தொகை கொடுத்து மீண்டும் வாங்காது என்று சொல்லலாம்.

Advertisement