எல்லாரும் டிகே ஆகிட முடியுமா, வாயை விட்டு வம்பில் மாட்டிய ஆர்சிபி அணி – கலாய்த்து தள்ளும் ரோஹித் ரசிகர்கள், நடந்தது என்ன

Rohit Sharma Dinesh Karthik
- Advertisement -

2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் டி20 உலக கோப்பை தோல்விக்குப்பின் நடைபெற்ற நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பரிதாபத் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் ஒருநாள் தொடரிலும் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. குறிப்பாக முதல் போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்தும் வங்கதேசத்தின் 10வது டெயில் எண்டர்கள் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியைப் பறித்த நிலையில் 2வது போட்டியில் 7வது லோயர் மிடில் ஆர்டர் ஜோடி 148 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து தோல்வியை பரிசளிக்கும் அளவுக்கு கடைசி நேரங்களில் இந்தியா மோசமாக செயல்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

முன்னதாக நடைபெற்ற 2வது போட்டியில் 272 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி, ஷிகர் தவான் உள்ளிட்ட நம்பிக்கை நட்சத்திரங்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களும் அக்சர் படேல் 56 ரன்களும் குவித்து போராடி அவுட்டானார்கள். அதனால் வேறு வழியின்றி ரத்தம் வரும் அளவுக்கு காயத்தை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மா கட்டு போட்டுக் கொண்டு வலியுடன் களமிறங்கி 51* (28) ரன்களை அதிரடியாக குவித்தும் தீபக் சஹர், முகமது சிராஜ் போன்ற டெய்ல் எண்டர்கள் கை கொடுக்கத் தவறியதால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
குறிப்பாக முஸ்தஃபிசுர் ரகுமான் வீசிய கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது வலியுடன் போராடிய ரோகித் சர்மா 15 ரன்கள் எடுத்த போதிலும் கடைசி பதில் சிக்ஸர் அடிக்க தவறியதால் இந்தியா பரிதாபமாக தோற்றது. அதனால் அவர் 7வது இடத்தில் களமிறங்கியிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் என்று ரசிகர்களும் சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். அந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிதியாஸ் முத்தரப்பு கோப்பையின் இறுதி போட்டியில் தோல்வி உறுதியானதால் படம் எடுத்து பாம்பு டான்ஸ் போட்ட வங்கதேசத்தை அபாரமாக செயல்பட்டு கடைசி பந்தில் சிக்ஸர் பறக்க விட்டு அடித்து நொறுக்கிய தினேஷ் கார்த்திக் வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அதை தற்போது தங்களது அணிக்காக விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணி எல்லோராலும் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்து விட முடியுமா? என்ற வகையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் தினேஷ் கார்த்திக்கை பாராட்டியிருந்தது. அதைப் பார்த்த ரோஹித் சர்மா ரசிகர்கள் எல்லோராலும் ஒரு ஐபிஎல் கோப்பையை கூட தொட்டுப் பார்க்க முடியுமா? என்று பெங்களூரு அணிக்கு அபார பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

அத்துடன் 2020இல் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் ஒரு போட்டியில் சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் சிக்சர் தேவைப்பட்ட போது அதை அடித்து ரோகித் சர்மா வெற்றி பெற வைத்தது உங்களுக்கு நினைவில்லையா? என்றும் அவரது ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். அது போக 15 வருடங்களாக தடுமாறிய தினேஷ் கார்த்திக் கடைசி காலத்தில் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் பல வருடங்கள் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மாவுடன் ஒப்பிடுவது பெங்களூரு ரசிகரான தமக்கே பிடிக்கவில்லை என்று ஒரு ரசிகர் விமர்சித்துள்ளார்.

அத்துடன் கதை முடிந்ததாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் உலக கோப்பையில் விளையாடும் அளவுக்கு வாய்ப்பு கொடுத்த ரோகித் சர்மாவை மறக்க வேண்டாம் என்றும் சில ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: அடுத்தவங்களை குறை சொல்லாம முதலில் உங்களை பாருங்க, கேப்டன் ரோஹித் சர்மாவை விமர்சிக்கும் ப்ராட் ஹாக் – விவரம் இதோ

மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இதே வங்கதேசத்துக்கு எதிரான போட்டி உட்பட எதிலுமே ஃபினிஷிங் செய்யாமல் தினேஷ் கார்த்திக் சுமாராக செயல்பட்டது நினைவில்லையா என்றும் பதிலடி கொடுக்கும் ரசிகர்கள் இது போன்ற சண்டையை உருவாக்கும் பதிவுகளை ஏன் போடுகிறீர்கள் என்றும் பெங்களூரு அணியை சரமாரியாக விமர்சிக்கிறார்கள்.

Advertisement