அடுத்தவங்களை குறை சொல்லாம முதலில் உங்களை பாருங்க, கேப்டன் ரோஹித் சர்மாவை விமர்சிக்கும் ப்ராட் ஹாக் – விவரம் இதோ

Hogg
- Advertisement -

வங்கதேச மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவி விட்டது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் ஆரம்பத்திலேயே 9 விக்கெட்களையும் 2வது போட்டியில் 6 விக்கெட்டுகளையும் எடுத்து வெற்றியை வசப்படுத்திய இந்தியா மெஹதி ஹசன் போன்ற 8வது இடத்தில் களமிறங்கிய பேட்ஸ்மேன் தோல்வியை பரிசளிக்கும் அளவுக்கு அழுத்தமான கடைசி நேரங்களில் சொதப்பி அவமான தோல்வியை சந்தித்தது. அதனால் டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே குறைந்தபட்சம் 0 – 3 (3) என்ற கணக்கில் வைட்வாஷ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற பரிதாபத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

Deepak Chahar 1

- Advertisement -

முன்னதாக இத்தொடரில் அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரர் குல்தீப் சென் முதல் போட்டியுடன் காயமடைந்து வெளியேறிய நிலையில் 2வது போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தீபக் சஹார் ஆகியோர் காயமடைந்து வெளியேறினார்கள். இது போக சமீப காலங்களில் பும்ரா, ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் உலக கோப்பைக்கு முன்பாக கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக தீபக் சஹார் கடந்த 2022 ஐபிஎல் தொடரிலிருந்து இப்போது வரை காயமடைந்து வெளியேறுவது இது 3வது முறையாகும்.

குறை சொல்லாதீங்க:

பொதுவாக இதுபோல் காயமடையும் வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமிக்கு சென்று முழுமையாக குணமடைந்து விட்டார் என்று சான்றிதழ் பெற்ற பின்பு தான் இந்தியாவுக்கு விளையாட முடியும். ஆனால் சமீப காலங்களில் முக்கிய தொடர்களில் விளையாட வேண்டும் என்பதற்காக முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே முக்கிய வீரர்கள் எப்படியோ சான்றிதழை பெற்றுக்கொண்டு வருவதே மீண்டும் காயமடைவதற்கு காரணமாக அமைந்து வருகிறது. அதனால் தாம் உட்பட யாராக இருந்தாலும் 100% குணமடைந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற வகையில் என்சிஏவை கேப்டன் ரோகித் சர்மா விமர்சித்தார்.

Rohit-Sharma

இருப்பினும் நீங்கள் முதலில் ஃபிட்டாக காயமடையாமல் விளையாடுங்கள் பின்னர் பேசுங்கள் என்று ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்தனர். ஏனெனில் இதர வீரர்களை விட கேப்டனாக பொறுப்பேற்ற பின் நிறைய காயங்களை சந்தித்து பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுத்த ரோகித் சர்மாவால் வரலாற்றிலேயே இந்த வருடம் முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சிஸ்டத்தை குறை சொல்லாமல் உங்கள் மீதான தவறை பார்க்குமாறு கேப்டன் ரோகித் சர்மாவை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹாக் விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் தங்கங்களை சம்பாதித்து பணக்காரனாக விரும்பினால் அதற்கு முதலில் நீங்கள் மாசு கலந்த கடினமான வேலைகளை செய்ய வேண்டும். சுய கட்டுப்பாடு வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்ன பயிற்சிகள் செய்கிறீர்கள் அடுத்த போட்டிக்கு எப்படி தயாராகிறீர்கள் ஆகியவற்றை உங்களுக்கு நீங்களே சோதித்துப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக தற்போது நீங்கள் ஒரு டி20 தொடரில் விளையாடும் போது அடுத்த 2 வாரத்தில் ஒரு டெஸ்ட் தொடர் வரும் பட்சத்தில் அதற்காக பயிற்சிகளில் நீங்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டு உழைத்து பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டும்”

hogg

“அதை விட்டு விட்டு சிஸ்டத்தை குறை சொல்லாமல் முதலில் உங்களை பாருங்கள். உலக அளவில் உள்ள அணிகளில் நிறைய காயங்கள் நிகழ்கின்றன. அதற்காக நீங்கள் அந்த வருடத்தில் நடைபெறும் அதிகப்படியான போட்டிகளை குறை சொல்லக்கூடாது. போட்டிகள் நடைபெறும் போது அதில் விளையாடும் வீரர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்பதில் ஆச்சரியமில்லை”

இதையும் படிங்க: IND vs BAN : ரோஹித்துக்கு பதிலாக 3 ஆவது போட்டியில் ஓப்பனராக ஆடப்போவது யார்? – விவரம் இதோ

“அத்துடன் உங்களிடம் 3 வகையான கிரிக்கெட் இருப்பதால் இது போன்ற சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் இறுதியில் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் தான் அதற்காக தங்களது உடலை பாதுகாத்து பயிற்சி கொடுத்து கட்டுக்கோப்புடன் வைத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement