IND vs BAN : ரோஹித்துக்கு பதிலாக 3 ஆவது போட்டியில் ஓப்பனராக ஆடப்போவது யார்? – விவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வங்கதேச நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணியானது 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

IND vs BAN Rohit Sharma Liton Das

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது நாளை டிசம்பர் 10-ஆம் தேதி சட்டகிராம் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டாவது போட்டியின் போது கட்டை விரலில் காயமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக ரோகித் சர்மாவிற்கு பதிலாக யார் துவக்க வீரராக களம் இறங்குவார்கள்? என்று எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக இஷான் கிஷன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டாலும் வலது கை, இடது கை துவக்க வீரர்கள் வேண்டும் என்கிற அடிப்படையில் தவானுடன் கே.எல் ராகுல் களமிறங்கி விளையாடுவார் என்று தெரிகிறது.

Ishan Kishan 1

அதனால் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்று தெரிகிறது. ஒருவேளை அவர் மிடில் ஆர்டரில் செட் ஆகவில்லை என்றால் ராகுல் திரிப்பாதி அல்லது ராஜத் பட்டித்தார் ஆகிய இருவரில் ஒருவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு காத்திருக்கிறது.

- Advertisement -

இருப்பினும் நாளைய போட்டியில் கேப்டனாக செயல்பட இருக்கும் கே.எல் ராகுல் டாசுக்கு பிறகு ரோகித் சர்மா இடத்தில் விளையாடப்போவது யார் என்று அறிவிப்பார். அதேபோன்று இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய தீபக் சாகர் காயம் காரணமாக மூன்றாவது போட்டியை தவற விட்டுள்ளதால் இந்திய அணி உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர், சிராஜ் ஆகிய மூவருடன் மட்டுமே விளையாடவுள்ளது.

இதையும் படிங்க : IND vs BAN : ரோஹித் மற்றும் தீபக் சாகர் வெளியேறிய நிலையில் ஒரு வீரர் மட்டும் இணைப்பு – பி.சி.சி.ஐ அறிவிப்பு

அதேவேளையில் முக்கியமான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் அல்லது சபாஷ் அகமது ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement