இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வங்கதேச நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற வங்கதேச அணியானது இந்த ஒரு நாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் ஒருமுறை வங்கதேச அணி அவர்களது நாட்டில் அவர்களது பலத்தினை நிரூபித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை (டிசம்பர் 10)-ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஒரு நாள் தொடரில் ஏகப்பட்ட இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக பலரும் அணியில் இருந்து விலகி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த ரோகித் சர்மா மற்றும் தீபக்சாகர் ஆகியோர் வெளியேறிய நிலையில் நாளைய மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் தீபக் சாகர் ஆகியோர் வெளியேறிய நிலையில் அவர்களுக்கு பதிலாக எந்தெந்த வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
🚨 NEWS 🚨: Kuldeep Yadav added to #TeamIndia squad for the final ODI against Bangladesh. #BANvIND
Other Updates & More Details 🔽https://t.co/8gl4hcWqt7
— BCCI (@BCCI) December 9, 2022
இவ்வேளையில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளதால் ஒரே ஒரு வீரரை மட்டுமே அணியில் அதிகாரவபூர்வமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இணைத்துள்ளது. அந்த வகையில் நாளைய போட்டிக்கான இந்திய ஒருநாள் அணியில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவதாக இன்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : மும்பைக்கு திரும்பிய ரோஹித் சர்மா. டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? – பி.சி.சி.ஐ வெளியிட்ட தகவல்
அவர் இந்திய அணியில் இணைக்கப்பட்டிருந்தாலும் நாளைய போட்டியில் தீபக் சாகருக்கு பதிலாக சபாஷ் அகமதும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷனும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.