மும்பைக்கு திரும்பிய ரோஹித் சர்மா. டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? – பி.சி.சி.ஐ வெளியிட்ட தகவல்

- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்ற முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற வங்கதேச அணியானது இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

IND vs BAN Rohit Sharma Liton Das

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை டிசம்பர் 10-ஆம் தேதி சட்டகிராம் நகரில் நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கு பின்னதாக இந்திய அணி அந்நாட்டு அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரானது டிசம்பர் 14-ஆம் தேதி துவங்க இருக்கும் நிலையில் கடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது கட்டைவிரலில் காயமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாளைய கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

Rohit-Sharma

மேலும் அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? என்பது மும்பைக்கு சென்ற பிறகுதான் தெரியும் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் ரோகித் சர்மா குறித்த முக்கிய தகவலை தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி கட்டை விரலில் காயம் அடைந்த ரோகித் சர்மா தற்போது மும்பை திரும்பியுள்ளார். அவர் விரைவில் சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனைக்காக செல்ல உள்ளார். இந்த பரிசோதனையின் முடிவில் தான் அவரது காயத்தின் தன்மையை குறித்து முடிவான விவரம் நமக்கு கிடைக்கும். அதன் பின்னரே அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? அல்லது அந்த தொடரில் இருந்து வெளியேறுவாரா? என்பது குறித்து உறுதியாக கூற முடியும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : அப்படினா 3 – 0 ஒய்ட் வாஷ் தோல்வி நிச்சயம் சீயர்ஸ், பிசிசிஐ அறிவிப்பால் இப்போதே கவலையடைந்த ரசிகர்கள் – காரணம் என்ன

இதன் காரணமாக இன்னும் டெஸ்ட் தொடர் துவங்க 4-5 நாட்களே உள்ள வேளையில் கட்டாயம் அவர் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement