அப்படினா 3 – 0 ஒய்ட் வாஷ் தோல்வி நிச்சயம் சீயர்ஸ், பிசிசிஐ அறிவிப்பால் இப்போதே கவலையடைந்த ரசிகர்கள் – காரணம் என்ன

Siraj
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பைக் கோட்டை விட்டது. இத்தனைக்கும் வங்கதேசத்தை விட உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டிருந்தும் முதல் போட்டியில் ஆரம்பத்திலேயே 9 விக்கெட்டுகளையும் 2வது போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்தும் மெஹதி ஹசன் போன்ற லோயர் பேட்ஸ்மேன் கையில் வைத்திருந்த வெற்றியை தட்டிப்பறிக்கும் அளவுக்கு கடைசி நேரத்தில் இந்தியா மோசமாக செயல்பட்டது ரசிகர்களை கோபமடைய வைத்தது.

அத்துடன் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் இப்படி தோல்வியை சந்தித்ததால் அந்தக் கோப்பையையும் இந்தியா வெல்லப்போவதில்லை என்று இந்திய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். அத்துடன் டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் சம்பிரதாய கடைசி வென்றால் தான் குறைந்தபட்சம் 3 – 0 (3) என்ற ஒயிட் வாஷ் அவமானத்தை தவிர்க்க முடியும் என்ற பரிதாபத்திற்கும் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ஆனால் 2வது போட்டியில் காயத்தை சந்தித்து கடைசி நேரத்தில் வேறு வழியின்றி கட்டு போட்டுக்கொண்டு வலியுடன் களமிறங்கி வெற்றிக்கு போராடிய ரோகித் சர்மா இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

- Advertisement -

அப்போ வைட்வாஷ் உறுதி:
அதன் காரணமாக துணை கேப்டனாக உள்ள கேஎல் ராகுல் இந்த கடைசி போட்டியில் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது இதனால் இந்த தொடரில் ஏற்கனவே 2 அவமானங்களை சந்தித்த இந்தியா 3 – 0 என்ற கணக்கில் மற்றுமொரு ஒயிட் வாஷ் அவமான தோல்வியை சந்திப்பது உறுதி என்று இப்போதே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது மனதை தெம்பேற்றி வருகிறார்கள். ஏனெனில் ஒரு கட்டத்தில் அதிரடி சரவெடியான பேட்ஸ்மேனாக செயல்பட்ட ராகுல் சமீப காலங்களில் சுயநல எண்ணத்துடன் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாகி வருகிறார்.

அதனால் ஏற்கனவே அவர் மீது கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியுடன் இருக்கும் நிலையில் 2020, 2021 ஐபிஎல் சீசன்களில் பஞ்சாப் அணியின் கேப்டனாக 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் ஒரு முறை கூட பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றதில்லை. இருப்பினும் ரசிகர்கள் அறியாத ஏதோ ஒரு திறமை அவரிடம் இருப்பதாக மயங்கிய பிசிசிஐ அவரை ரோஹித் சர்மாவுக்கு பின் வருங்கால இந்தியாவின் கேப்டனாக உருவாக்கும் வகையில் துணை கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதே போல் ரோகித் சர்மா காயமடைந்த நிலையில் முதல் முறையாக முழுமையாக கேப்டன்ஷிப் செய்த ராகுல் சொதப்பலாக செயல்பட்டதால் 0 – 3 என்ற கணக்கில் 2வது தர இளம் தென்னாப்பிரிக்க வீரர்களை கொண்ட அணியிடம் இந்தியா ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது.

அதனாலேயே இவர் கேப்டனாக சரிப்பட்டு வர மாட்டார் என்று ரசிகர்கள் கலாய்த்த நிலையில் இந்த வங்கதேச தொடரின் 2வது போட்டியில் ரோகித் சர்மா காயமடைந்த போது தற்காலிக கேப்டனாக ராகுல் செய்யப்பட்டார். ஆனால் ரோகித் சர்மா இருந்த போது 69/6 என்ற நிலைமையில் இருந்த வங்கதேசம் அவர் சென்ற பின் ராகுல் வழி நடத்திய போது 148 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை பறித்தது.

அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் ராகுல் சிறந்த கேப்டன் கிடையாது என்று வாசிம் ஜாஃபர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விமர்சித்த நிலையில் ஏற்கனவே பேட்டிங்கில் தடுமாறும் அவர் கேப்டனாகவும் தடுமாறுகிறார். அதனால் கடைசி போட்டியில் இந்தியா கொதித்தெழுந்து ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் என்று பகல் கனவு காணக்கூடாது என சமூக வலைதளங்களில் பேசிக் கொள்ளும் இந்திய ரசிகர்கள் ஏதேனும் மேஜிக் நிகழ்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கூறுகிறார்கள்.

Advertisement