3 வருஷமா கனவோடு காத்திருக்கும் அவருக்கு அறிமுக வாய்ப்பினை குடுங்க – ரசிகர்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

KS-Bharat
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை மறுதினம் பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் தற்போது தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Keeper

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடப்போவது யார்? என்ற கேள்வியே ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு காணப்படுகிறது. ஏனெனில் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் அண்மையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அணியிலிருந்து வெளியேறியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய விக்கெட் கீப்பர் அறிமுகமாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்களாக கே.எஸ் பரத் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரில் யார் விக்கெட் கீப்பராக இருப்பார்கள்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் கட்டாயம் இந்த ஆஸ்திரேலிய தொடரில் கே.எஸ் பரத்திற்கு தான் அறிமுக வாய்ப்பை பரிசாக வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

KS Bharat 1

இருப்பினும் இந்திய அணியின் கீப்பராக ரிஷப் பண்ட் இருக்கும்போதும் சரி, விரிதிமான் சஹா இருக்கும்போதும் சரி இந்திய அணியின் பேக்கப் விக்கெட் கீப்பராக எப்பொழுதுமே கே.எஸ் பரத் இந்திய அணியுடன் பயணித்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்திய அணி எங்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்றாலும் பேக்கப் விக்கெட் கீப்பராக அணியுடன் இணைந்து இருந்த கே.எஸ் பரத் இன்றளவும் தனது அறிமுக வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

- Advertisement -

இப்படி இந்திய அணிக்காக அறிமுகமாக வேண்டும் என்ற பெரிய கனவோடு மூன்று ஆண்டுகளாக காத்திருக்கும் அவரே இந்த அறிமுக வாய்ப்புக்கு தகுதியானவர் என்றும் அவருக்கு தான் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது ஆதரவினை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : இந்திய அணியில் இனி இவரை மீண்டும் பாக்க வாய்ப்பேயில்லை. முடிவுக்கு வந்த – சீனியர் வீரரின் கதை

ஏற்கனவே இந்த ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் தான் செயல்பட வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கணித்திருந்த வேளையில் ரசிகர்கள் மத்தியிலும் கே.எஸ் பரத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. இஷான் கிஷன் என்னதான் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெற்றிருந்தாலும் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை கே.எஸ் பரத் தான் இஷான் கிஷனை தாண்டி ஒருபடி மேலே உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement