இந்திய அணியில் இனி இவரை மீண்டும் பாக்க வாய்ப்பேயில்லை. முடிவுக்கு வந்த – சீனியர் வீரரின் கதை

Rahane
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. நாளை மறுதினம் பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் நகரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்ட வேளையில் அதில் பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Rahane

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வீரரும், முன்னாள் துணை கேப்டனுமான அஜிங்க்யா ரகானேவிற்கு கடந்த சில தொடர்களாகவே வாய்ப்பு மறுக்கப்பட்ட வேளையில் இந்த ஆஸ்திரேலியா தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் அவரது டெஸ்ட் கரியர் முடிவுக்கு வந்தது என்று கூறலாம்.

ஏனெனில் எதிர்வரும் இந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்கிற கட்டாயத்தில் உள்ள வேளையில் இந்த முக்கியமான தொடரிலும் ரகானேவிற்கு வாய்ப்பு கிடைக்காததால் 34 வயதாகும் ரஹானேவிற்கு நிச்சயம் இனி வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

rahane 1

ஏற்கனவே கடந்த ஆண்டு புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் ஒரே நேரத்தில் ஓரங்கட்டப்பட்ட வேளையில் புஜாரா இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் தனது திறனை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து தற்போது சிறப்பாக விளையாட வருகிறார். அதே நேரத்தில் ரகானே உள்ளூர் தொடரில் சற்று சுமாராகவே செயல்பட்டதால் அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்படாமல் இருக்கிறார்.

- Advertisement -

அதேவேளையில் இந்திய அணியில் பல இளம் வீரர்கள் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிடில் ஆடரில் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இதன் காரணமாக தற்போது ரகானேவின் கதை முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம். கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரகானே இதுவரை 82 போட்டிகளில் விளையாடி 4931 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : 16 அடி பாயும் குட்டி – தந்தையை மிஞ்சிய இளம் சந்தர்பால், டெஸ்ட் கிரிக்கெட்டில் வித்யாசமான உலக சாதனை

வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படும் ரகானே உள்நாட்டில் நடைபெறும் டெஸ்டில் சொதப்புவதை வாடிக்கையாவும் வைத்திருந்தார். தற்போதைய இந்திய அணியில் ஏற்கனவே பல மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் வேளையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பலமான வீரர்களை கட்டமைப்பதற்காக சீனியர் வீரர்களை ஓரங்கட்டி வரும் இந்திய அணியின் நிர்வாகம் ரகானேவை முற்றிலுமாக ஓரம் கட்டி விட்டது என்றே கூறலாம்.

Advertisement