அப்போ கப் நம்மகில்லையா? பாகிஸ்தான் வெளியேறியதை கொண்டாட முடியாமல் சோகத்தில் ஆழ்ந்த இந்திய ரசிகர்கள்

India Semi Final NZ PAK
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலுக்கும் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. மேலும் தற்போது அணியில் ரோஹித் முதல் ஷமி வரை அனைவருமே நல்ல ஃபார்மில் அபாரமாக செயல்பட்டு வருவதால் 2011 போல சொந்த மண்ணில் இந்தியா கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் 2, 3வது இடத்தைப் பிடித்துள்ள தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதி சுற்றின் 2வது போட்டியில் மோதுவதும் உறுதியாகியுள்ளது. அதனால் இந்தியாவுடன் நவம்பர் 15ஆம் தேதி செமி ஃபைனலில் மோதப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் நவம்பர் 9ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்தது.

- Advertisement -

கவலையில் ரசிகர்கள்:
அதனால் இங்கிலாந்துக்கு எதிரான தங்களுடைய கடைசி போட்டியில் 287 ரன்கள் அல்லது 284 பந்துகள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்த 2 வகையான வெற்றியையும் பெறுவது அசாத்தியம் என்பதால் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறுவது 99.99% உறுதியாகி உள்ளது என்றே சொல்லலாம்.

அந்த வகையில் இந்தியாவை வகைவகையாக கிண்டலடித்து விமர்சித்த பாகிஸ்தான் லீக் சுற்றுடன் பெட்டி படுகையை கட்டிக் கொண்டு வீட்டுக்கு கிளம்ப தயாராகியுள்ளது இந்திய ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் சமயம் செமி ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்ளப் போகிறோம் என்பது இந்திய ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் 2000 நாக் அவுட் ட்ராபி ஃபைனல் உட்பட வரலாற்றில் நடந்த பெரும்பாலான ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்விகளையே சந்தித்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலில் ஜடேஜாவுடன் போராடிய தோனி ரன் அவுட்டானதால் காலத்திற்கும் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்த நியூசிலாந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை தோற்கடித்தது. அதை விட வரலாற்றில் இதுவரை நடைபெற்ற ஐசிசி தொடர்களில் எஞ்சிய உலக அணிகளுக்கு எதிராக விளையாடிய நாக் அவுட் போட்டிகளில் நியூசிலாந்து 18 போட்டியில் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து 14 தோல்விகளை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: நானே அவரோட ரசிகன்.. சச்சினுக்கு நிகரான அவர் விளையாடுவது கிரிக்கெட்டுக்கு பெருமை.. ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் பாராட்டு

ஆனால் இந்தியாவுக்கு விளையாடிய 3 ஐசிசி நாக் அவுட் போட்டியிலும் ஒரு முறை கூட தோற்காமல் நியூசிலாந்து வென்றுள்ளது. இதை அறியும் இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானின் தோல்வியை கொண்டாட முடியாமல் “அப்படின்னா நமக்கு இம்முறை கோப்பை கிடைக்காதா” என்று சமூகவலைதளங்களில் பயத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அத்துடன் இதே தொடரில் லீக் சுற்றில் நியூசிலாந்தை 20 வருடங்கள் கழித்து தோற்கடித்தது போல் இந்தியா இப்போட்டியிலும் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது.

Advertisement