நானே அவரோட ரசிகன்.. சச்சினுக்கு நிகரான அவர் விளையாடுவது கிரிக்கெட்டுக்கு பெருமை.. ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் பாராட்டு

Viv Richards
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றிகளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 545 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 101* ரன்கள் குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் வாழ்நாள் சாதனையும் சமன் செய்தார்.

இந்நிலையில் தாம் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் வீரர் சர் விவ் ரிச்சர்ட்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். குறிப்பாக களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவது, விக்கெட்டுக்காக நடுவர்களிடம் வெறித்தனமாக அவுட் கேட்பது போன்ற விராட் கோலியின் செயல்பாடுகள் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

விராட் ரசிகன்:
மேலும் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த போது எழுந்த விமர்சனங்களுக்காக அசராமல் தற்போது கம்பேக் கொடுத்துள்ள விராட் கோலி ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களின் வரிசையில் கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்ப்பதாக ரிச்சர்ட்ஸ் பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு நிகழ்ச்சியில் பல திறமையான நபர்கள் இருந்தாலும் அவர்களுக்கு டாப்பில் இருப்பவராக விராட் கோலியை கடந்து நீங்கள் ஒருவரை பார்க்க முடியாது”

“நான் நீண்ட காலமாக விராட் கோலியின் ரசிகனாக இருந்து வருகிறேன். அவரும் சச்சின் டெண்டுல்கர் போன்ற மகத்தான வீரர்களில் ஒருவராக ஏன் இருக்கிறார் என்பதை தொடர்ந்து காட்டி வருகிறார். இந்த உலகக் கோப்பைக்கு முன் விராட் சில கடினமான நேரங்களை சந்தித்தார். குறிப்பாக சிலர் அவரைப் பற்றி தைரியமான சில விமர்சனங்களை வைத்தனர். இருப்பினும் அவருக்கு ஆதரவு கொடுத்த அணி நிர்வாகம் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள் கொடுக்க வேண்டும்”

- Advertisement -

“அவருடைய ஃபார்ம் பற்றி அனைவரும் பல்வேறு விதமாக பேசினார்கள். ஆனால் தற்போது அவர் தன்னுடைய டாப் விளையாட்டுக்கு வந்துள்ளார். அவரைப் போன்ற ஒருவர் மிகவும் மோசமான நிலையிலிருந்து மீண்டும் வந்துள்ளதை பார்ப்பது பாரமாக இருக்கிறது. பொதுவாக ஃபார்ம் தற்காலிகமானது என்று சொல்வார்கள். அவர் தற்போது கிளாஸ் நிரந்தரமானது என்பதை காண்பித்துள்ளார்”

இதையும் படிங்க: என்னய்யா சொல்றிங்க.. செமி ஃபைனல் கனவில் விழுந்த இடியால்.. வீட்டுக்கு பெட்டி படுக்கையை கட்டும் பாகிஸ்தான்?

“அவர் மீண்டும் கிரிக்கெட்டில் கவனத்தை செலுத்தி விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். விராட் கோலி கிரிக்கெட்டின் பெருமை. என்னையும் அவரையும் வைத்து பலரும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். ஏனெனில் களத்தில் எங்களுடைய ஆர்வம் ஒரே மாதிரியாக இருக்கிறது. அந்த வகையில் விராட் கோலியின் ஆர்வம், லான் ஆன், லாங் ஆஃப் திசையில் ஃபீல்டிங் செய்வது, எல்பிடபுள்யூ போது ஆப்பீல் செய்வது போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறினார்.

Advertisement