இந்த மேட்ச்லையும் அவரை சேர்க்கலயா? என்ன தான் நடக்குது இந்திய அணியில் – ரசிகர்கள் கொந்தளிப்பு

IND
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

INDvsWI

- Advertisement -

இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 52 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 33 ரன்களையும் குவித்தனர். அதன்பின்னர் தற்போது 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.

Ruturaj

இந்நிலையில் இந்த போட்டியிலும் இந்திய அணியின் தொடக்க வீரராக அணியில் இடம்பெற்றுள்ள ரருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் இந்திய டி20 தொடரின் அணியில் இடம் பிடித்து வரும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை.

- Advertisement -

அவருக்கு பதிலாக இடதுகை ஆட்டக்காரரான இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. இருப்பினும் தனக்கு கிடைத்த இந்த இரண்டு வாய்ப்புகளே இஷான் கிஷன் தவறவிட்ட வேளையில் திறமை இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய அணியில் வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதற்கு காரணம் என்ன? என்று ரசிகர்கள் சமூக வலைதளம் மூலமாக தங்களது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : 20 லட்ச ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்ட இவரை 10 கோடி கொடுத்து வாங்க இதுவே காரணம் – கம்பீர் பேட்டி

மேலும் ஐபிஎல் தொடர் மட்டுமின்றி நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி, அதனைத்தொடர்ந்து நடைபெற்ற விஜய் ஹசாரே என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement