20 லட்ச ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்ட இவரை 10 கோடி கொடுத்து வாங்க இதுவே காரணம் – கம்பீர் பேட்டி

Gambhir
- Advertisement -

இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் துவங்க உள்ள பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் பல வீரர்கள் கோடிகளில் தேர்வு செய்யப்பட்டு ஆச்சரியப்பட்ட வைத்தனர். அந்த வகையில் இந்திய அணிக்காக விளையாடும் சில வீரர்கள் கோடிகளில் சென்றாலும் இந்திய அணிக்காக இதுவரை விளையாடாத இளம் வீரர் ஒருவர் 10 கோடிக்கு ஏலம் போயுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Auction

- Advertisement -

அந்த வகையில் 25 வயதான ஆவேஷ் கான் 2017 ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் கடந்த ஆண்டு தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் 16 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி டெல்லி அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்நிலையில் அவரை லக்னோ அணியானது 10 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது அனைவரது மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து தற்போது அவ்வளவு தொகை கொடுத்து அவரை லக்னோ அணியில் தேர்வு செய்ததன் காரணம் என்ன என்பது குறித்து அணியின் மென்டோர் கௌதம் கம்பீர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

avesh 1

முதலில் லக்னோ அணியில் நாங்கள் பிரசித் கிருஷ்ணாவை தான் ஏலத்தில் எடுக்க நினைத்தோம். ஆனால் அவர் 9.25 கோடி வரை சென்றதால் அதையும் தாண்டி எங்களால் அவருக்கு செல்ல முடியவில்லை. அதற்கு அடுத்த இடத்தில் நாங்கள் ஆவேஷ் கானை தீர்மானித்திருந்தோம். அந்த வகையில் அவரின் ஏலத் தொகை 20 லட்சமாக இருந்தாலும் அவரை 10 கோடி கொடுத்து எடுத்தோம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சில மக்கள் எப்போதுமே இது போன்ற வீரர்களை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தால் ஏன் இவ்வளவு தொகை கொடுத்து எடுக்கிறார்கள் என்று கேட்கத்தான் செய்வார்கள். ஆனால் அதற்கு நல்ல காரணம் இருக்கிறது. ஏனெனில் தற்போதுள்ள நிலைமையை பார்க்காமல் எதிர் காலத்தை கணக்கில் கொள்ளவேண்டும்.

இதையும் படிங்க : இந்திய அணியை அச்சுறுத்த 2 ஆவது டி20 போட்டியில் இணைக்கப்பட்ட நட்சத்திர வீரர் – விவரம் இதோ

மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச கூடிய ஒரு அற்புதமான பவுலர் ஆவேஷ் கான். எனவே அவரை இந்த தொகையில் எடுத்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே லக்னோ அணியில் ராகுல், ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோர் இருப்பதுடன் தற்போது இன்னும் சில வீரர்களை நாங்கள் எடுத்துள்ளது அணிக்கு பலம் சேர்த்துள்ளது என கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement