இந்திய அணியை அச்சுறுத்த 2 ஆவது டி20 போட்டியில் இணைக்கப்பட்ட நட்சத்திர வீரர் – விவரம் இதோ

WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

venky

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் 2வது டி20 போட்டியில் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்துள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யாமல் அதே பிளேயிங் லெவனுடன் விளையாடுகிறது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை பொருத்தவரை ஒரே ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. அதுவும் மிக சிறப்பான ஒரு வீரரை அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

holder 2

அதன்படி கடந்த முதலாவது டி20 போட்டிக்கு முன்னர் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவ வீரர் ஜேசன் ஹோல்டர் அணியில் இடம் பெறவில்லை. ஆனால் தற்போது இரண்டாவது போட்டிக்கு அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதால் சுழற்பந்து வீச்சாளரான ஃபேபியன் ஆலன் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : மீண்டும் மதிக்காத ஹைதராபாத்! வார்னரை தொடர்ந்து கடுப்பில் வெளியேறிய மற்றொரு ஆஸ்திரேலியர் – என்ன நடந்தது?

வேகப்பந்து வீச்சாளரான இவர் பேட்டிங்கிலும் பிரம்மாண்டமான சிக்சர்களை பறக்கவிடும் பலம் கொண்டவர் இதனால் நிச்சயம் அவர் இந்திய அணிக்கு எதிராக இன்று தனது முழு பலத்தையும் வெளிக்காட்ட காத்திருப்பார் இதுவே எடுத்த சரியான முடிவு என்று கூறலாம் இருப்பினும் போட்டி முடிந்த பின்னர்தான் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement