இந்திய கிரிக்கெட்டின் சிஸ்டத்தை ஐபிஎல் தாக்கிடுச்சு, இதை உங்களால் மறுக்க முடியுமா? ப்ராட் ஹோக் விமர்சிக்கும் காரணம் என்ன

Hogg
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் ஒரு ஐசிசி கோப்பையை வென்றது. அதன் பின் கடந்த 10 வருடங்களாக அடுத்த உலக கோப்பையை வெல்ல முடியாமல் திணறும் இந்தியா நாக் அவுட் சுற்று வரை சென்று முக்கிய நேரத்தில் சொதப்பி வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளது. இத்தனைக்கும் எதிரணிகளை காட்டிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்டிருந்தும் இப்படி சொதப்புவதே இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. அதை விட ஐபிஎல் தொடரில் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்துக்காக அதிரடியாக செயல்படும் நட்சத்திர வீரர்கள் நாட்டுக்காக தடவலாக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைவதை பலமுறை ரசிகர்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகிறார்கள்.

INDia

- Advertisement -

முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு தரமான இளம் வீரர்களை அடையாளப்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கப்பட்டது. கடந்த 15 வருடங்களில் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு இன்று சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் கண்டுள்ள ஐபிஎல் தொடரால் ஒரே சமயத்தில் 2 அணிகளை விளையாட வைக்கும் அளவுக்கு நிறைய தரமான இளம் கிரிக்கெட் வீரர்களும் இந்திய அணிக்கு கிடைத்து வருகிறார்கள். ஆனால் ஐபிஎல் இல்லாத போது இந்திய அணியில் இருந்த தேசப்பற்று தற்போது இருக்கிறதா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்பதே நிதர்சனமாகும்.

மோசமான சிஸ்டம்:

ஏனெனில் அப்போதெல்லாம் இந்தியாவுக்காக விளையாடுவதை கௌரவமாகவும் உயிராகவும் நினைத்த வீரர்களுக்கு சர்வதேச அரங்கில் விளையாடி விளம்பரங்களில் நடித்தால் மட்டுமே வாழ்வாதாரத்துக்கு தேவையான பணமும் கிடைத்தது. ஆனால் ஐபிஎல் வந்த பின் இந்தியாவுக்காக விளையாடும் உச்சகட்ட நட்சத்திர வீரரான விராட் கோலி வாங்கும் ஒரு வருட சம்பளத்தை வெறும் 2 மாதங்களில் ஐபிஎல் தொடரில் விளையாடி இளம் வீரர்கள் சம்பாதித்து விடுகிறார்கள். பொதுவாக பணம் கிடைத்து விட்டால் உழைக்கும் பழக்கம் குறைந்து விடுவது மனிதனின் இயல்பாகும்.

Top 5 Exciting Young Talented Players to Watch Out in IPL 2022

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் சில மாதங்களில் கோடிகளை பார்த்து விடும் இளம் வீரர்கள் நாட்டுக்காக குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் எண்ணத்தை மூட்டை கட்டி விட்டு சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு டி20 கிரிக்கெட்டில் விளையாடினால் போதும் என்ற மனநிலைமைக்கு வந்து விட்டார்கள். அதனால் இந்திய கிரிக்கெட்டின் அடிப்படை சிஸ்டம் ஐபிஎல் தொடரால் பாழாகி விட்டதாக தெரிவிக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஐபிஎல் இந்திய கிரிக்கெட்டை பாதிக்கிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்களது சிஸ்டத்தில் வரும் இளம் வீரர்கள் ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு அதிக கவனத்தை செலுத்துகிறார்கள். அதில் அதிகப்படியான பணம் கிடைக்கும் என்ற எண்ணமும் குறுகிய நேரத்தில் விளையாடி முடித்து விடலாம் என்ற எண்ணமே அதற்கு காரணமாகும். அது அவர்களுக்கு பணம் எளிதாக கிடைக்க வழி செய்கிறது. அந்த வகையில் அவர்கள் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் போது டெஸ்ட் போட்டிகளுக்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் அவர்களுக்கு எப்படி ஒரு பேட்ஸ்மேனை திட்டம் போட்டு அவுட் செய்வது, எப்படி நீண்ட நேரம் நங்கூரமாக நின்று பெரிய இன்னிங்ஸ் விளையாடுவது போன்றவை தெரிவதில்லை”

Hogg

“குறிப்பாக தற்போதுள்ள தலைமுறையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்கள் அதிகமாக இல்லை. மொத்தத்தில் ஐபிஎல் தொடரால் இந்தியாவுக்காக புதிதாக களமிறங்கும் இளம் வீரர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார். அவர் கூறுவது போல இப்போதெல்லாம் நிறைய வீரர்கள் இந்தியாவை விட ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டில் விளையாடினால் போதும் என்ற எண்ணத்துடன் வளர ஆரம்பித்து விட்டார்கள்.

இதையும் படிங்க: ஹே எப்புர்ரா? மைதானத்திற்கு வந்த பும்ராவின் தம்பி. யார் இந்த சிறுவன்? – ஓவர் நைட்டில் பேமஸ் ஆக என்ன காரணம்?

சொல்லப்போனால் அதன் காரணமாக ஹர்திக் பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்கள் கூட கிரிக்கெட்டை உயிர்நாடியாக கருதப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புவதில்லை. மொத்தத்தில் ஐபிஎல் என்பது இந்திய கிரிக்கெட்டின் அடிப்படை சிஸ்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை உண்மையான இந்திய ரசிகனால் மறுக்க முடியாது என்றே கூறலாம். வீரர்களின் சம்பளத்தில் பிசிசிஐ கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பதே இதற்கான தீர்வாக இருக்கலாம்.

Advertisement