ஹே எப்புர்ரா? மைதானத்திற்கு வந்த பும்ராவின் தம்பி. யார் இந்த சிறுவன்? – ஓவர் நைட்டில் பேமஸ் ஆக என்ன காரணம்?

Bumrah-Fan
- Advertisement -

இந்த உலகில் ஒருவரைப் போன்றே ஏழு பேர் ஒரே உருவ தோற்றத்துடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை நம்மிடம் இருந்து வருகிறது. அந்த வகையில் பிரபலங்களைப் போன்ற உருவ அமைப்பு உடைய பலர் சமகாலத்தில் பெரிய அளவில் பேமஸ் ஆகி வருவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களைப் போன்று சிலர் உருவத்தோற்றத்துடன் இருந்து ரசிகர்கள் மத்தியில் பேமஸாக திகழ்கின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா போன்றே தோற்றமுடைய ஒரு சிறுவன் ஓவர் நைட்டில் சமூக வலைதளத்தில் பேமஸ் ஆகி இருக்கிறார்.

அந்த வகையில் யார் அந்த சிறுவன்? என்ன நடந்தது? அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவலைத்தான் நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற முல்தான் மைதானத்தில் தான் இந்த சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதன்படி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கேமரா மட்டும் அடிக்கடி ஒரு சிறுவனின் முகத்தை காட்டிக் கொண்டே இருந்தது. இதில் அதிசயம் யாதெனில் அந்த சிறுவன் பார்ப்பதற்கு அச்சு அசலாக பும்ரா போன்ற முகத்தோற்றத்தை உடையவராக இருந்தான்.

- Advertisement -

அதோடு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அந்த சிறுவயது ரசிகர் முல்தான் நகரை சேர்ந்தவர் என்பதும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரிக்கவே அவர் மைதானத்திற்கு வந்ததாகவும் தெரிகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் அவரது இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வைரலாக்கி பல்வேறு சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : IND vs BAN : 90 வருட இந்திய கிரிக்கெட்டில் ஷ்ரேயஸ் ஐயர் தனித்துவமான சாதனை – தேநீர் இடைவெளியில் இந்தியாவின் ஸ்கோர் என்ன

அந்த வகையில் இந்த சிறுவன் பும்ராவின் தம்பி என்று சிலரும், மேலும் பாகிஸ்தானிலும் எங்களிடம் ஒரு பும்ரா இருக்கிறார் என்றும் இந்த புகைப்படத்தை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். அதேபோன்று மேலும் சிலர் பும்ரா பாகிஸ்தானுக்கு வரவேண்டாம் இவரே போதும் என்று சிலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement