1999இல் இப்படி தான் நடந்துச்சு.. இனிமேல் தான் எல்லாம் காத்திருக்கு.. இந்தியாவுக்கு அக்ரம் ஆதரவு

Wasim Akram 4
- Advertisement -

கோலகலமாக நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் 9 தொடர்ச்சியான வெற்றிகள் பெற்று செமி ஃபைனலில் காலம் காலமாக தோல்விகளை பரிசளித்து வந்த நியூசிலாந்து முதல் முறையாக தோற்கடித்த இந்தியா ஃபைனலில் வீழ்ந்தது.

குறிப்பாக அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் வரலாற்றில் முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்த இந்தியா இம்முறை 2011 போல கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 2013க்குப்பின் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் செய்து வரும் அதே சொதப்பலை மீண்டும் ஃபைனலில் அரங்கேற்றிய இந்தியா பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

- Advertisement -

வருங்காலம் நல்லாருக்கும்:
அப்படி ஒன்றல்ல இரண்டல்ல 10 வருடங்களாக நடைபெற்ற பெரும்பாலான ஐசிசி தொடர்களில் நாக் அவுட் வரை சென்று கைக்கு கிடைத்த கோப்பையை இந்தியா தவற விட்டு வருவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வேதனையாக அமைந்துள்ளது. இந்நிலையில் இத்தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிய இந்தியா ஃபைனலில் தோல்வியை சந்தித்தற்காக கவலைப்பட வேண்டியதில்லை என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இந்திய கிரிக்கெட்டின் வடிவமும் அடித்தளமும் அடிப்படையில் மிகவும் வலுவாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் நல்ல இடத்தில் இருப்பதால் வருங்காலத்தில் வெற்றிகள் கிடைக்கும் என்று கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக ஃபைனலில் சந்தித்த தோல்விக்காக அவர்கள் ஏமாற்றத்தை சந்தித்திருப்பார்கள். ஆனால் கிரிக்கெட்டில் இவை நடப்பது சகஜமாகும்”

- Advertisement -

“இத்தொடர் முழுவதிலும் அசத்திய இந்தியா ஒரே ஒரு மோசமான நாளை கொண்டிருந்தது. துரதிஷ்டவசமாக அது ஃபைனலில் வந்தது. இருப்பினும் நீங்கள் இந்தியாவின் வடிவத்தை பாருங்கள். வீரர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை பாருங்கள். அவர்கள் தொடர்ந்து திறமைக்கு வாய்ப்பு கொடுத்து இதை செய்து வருகிறார்கள். எனவே இந்திய கிரிக்கெட் வருங்காலத்தில் நல்ல இடத்தில் இருக்கிறது. 1999 உலகக்கோப்பை ஃபைனலில் நான் கேப்டனாக இருந்தேன்”

இதையும் படிங்க: சாரி’ப்பா மன்னிச்சுடுங்க.. வேதனையில் பொங்கிய இந்திய ரசிகர்.. ஆறுதலுடன் நன்றி சொன்ன வார்னர்

“அத்தொடரில் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்திருந்தாலும் ஃபைனலில் இந்தியாவை போல அவர்கள் எங்களை வீழ்த்தினார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற பல அணிகள் தொடர்ந்து லீக் சுற்றை தாண்டுவதற்கே திண்டாடும் நிலையில் இந்தியா மட்டும் 2021 டி20 உலகக் கோப்பை தவிர்த்து கடந்த 10 வருடங்களில் நடந்த அனைத்து ஐசிசி தொடர்களிலும் நாக் அவுட் சுற்றைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement