சாரி’ப்பா மன்னிச்சுடுங்க.. வேதனையில் பொங்கிய இந்திய ரசிகர்களுக்கு.. நன்றி சொன்ன டேவிட் வார்னர்

David Warner
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை கொடுத்து நிறைவு பெற்றது. ஏனெனில் சொந்த மண்ணில் நடைபெற்ற அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய இந்தியா 9 போட்டிகளில் வெற்றி பெற்று செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து 10 தொடர்ச்சியான சாதனை வெற்றிகளை பதிவு செய்தது.

மேலும் அனைத்து வீரர்களும் மிகச் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருந்ததன் காரணமாக 2011 போல கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினார். ஆனால் மீண்டும் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை நழுவ விட்டது.

- Advertisement -

சாரி’ப்பா மன்னிச்சுடுங்க:
அதனால் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை சொந்த மண்ணில் நிறுத்தி கோப்பையை முத்தமிடும் வாய்ப்பை இந்தியா தவற விட்டது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவும் வேதனையாகவும் அமைந்தது. மறுபுறம் முதல் போட்டியிலேயே இந்தியாவிடம் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியா அதன் பின் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்து செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.

அதை விட வலுவான இந்தியாவுக்கு எதிராக ஃபைனலில் டாஸ் வென்று முதலில் சிறப்பாக பந்து வீசி ஃபீல்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டு குறைந்தது 30 – 40 ரன்கள் சேமித்த அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 6வது கோப்பையை முத்தமிட்டது. அதனால் தங்களின் வெற்றி அலமாரியில் 6வது கோப்பையை அடுக்கிய ஆஸ்திரேலியா உலகின் புதிய சாம்பியனாக முன்னேறி சாதனை படைத்தது.

- Advertisement -

மறுபுறம் 2003 உலகக்கோப்பை ஃபைனல் முதல் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை தோல்விகளை பரிசளித்த ஆஸ்திரேலியா மீண்டும் இம்முறை சொந்த மண்ணில் தங்களை வீழ்த்தியதால் ஏராளமான இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அதில் ஒரு ரசிகர் “நீங்கள் பல கோடி இந்தியர்களின் நெஞ்சங்களை உடைத்து விட்டீர்கள்” என்று ட்விட்டரில் டேவிட் வார்னரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல்ல. இந்தியா ஆஸ்திரேலியா டி20 தொடரை எந்த சேனலில் பாக்கலாம் – போட்டி எத்தனை மணிக்கு துவங்கும்?

அதற்கு டேவிட் வார்னர் பதிலளித்துள்ளது பின்வருமாறு. “நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது ஒரு சிறந்த போட்டி மற்றும் சூழ்நிலை நம்ப முடியாததாக இருந்தது. இந்தியா உண்மையில் ஒரு அபாரமான தொடரை நடத்தியது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement